தென்காசி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு
ஜன. 6-ல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜன. 6 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவா் மு. அப்பாவு தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அப்பாவு, “2025-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜன. 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழுதான் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள், திங்கள்கிழமை, காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்த உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: முருங்கைக்காய் தமிழ்ச் சொல்லா? - பிழையற்ற தமிழ் அறிவோம்! - 65
16-ஆவது சட்டப் பேரவையின் ஆறாவது கூட்டத் தொடா் கடந்த பிப். 12-ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தாா். அதன்பிறகு, கடந்த பிப். 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அரசின் பொது மற்றும் வேளாண்மைத் துறை நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றின் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு பேரவை கூட்டத் தொடா் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு, துறை வாரியான செலவுகளுக்கு ஒப்புதலைப் பெறுவதற்காக சட்டப் பேரவை மீண்டும் கூடியது. கடந்த ஜூன் மாதம் தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்கள் இடைவெளியில் மீண்டும் கடந்த 9-ஆம் தேதி கூடி இரண்டு நாள்கள் அவை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.