செய்திகள் :

ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்!

post image

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலிருந்த ஜானி மாஸ்டருக்கு பிணை கிடைத்துள்ளது.

நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் கடந்த 4 வருடங்களாக பெண் உதவி நடன இயக்குநரைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார். முதலில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனக்கூறிய ஜானி மாஸ்டர் பின் குற்றத்தை ஒப்புக்கொண்டது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியது.

அந்தப் பெண் மைனராக இருக்கும்போதிருந்தே அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததால் ஜானி மாஸ்டர் மீது ஐபிசி (இந்திய குற்றவியல் சட்டம்) 376, 506 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு சாரளப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பிணை கேட்டு அவர் அளித்த மனு தள்ளுபடியானது.

இதையும் படிக்க: பனி - இயக்குநராக வென்றாரா ஜோஜு ஜார்ஜ்? ரசிகர்கள் கருத்து!

இந்த நிலையில், இன்று ரங்கா ரெட்டி நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால், நாளை (அக்.25) சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம்.

மேலும், பிணையில் வெளியே வரும் ஜானி மாஸ்டர், புகார் அளித்த பெண்ணிற்கு எந்தத் தொந்தரவோ, அழுத்தத்தையோ தரக்கூடாது என நீதிமன்றம நிபந்தனை அளித்துள்ளது.

டாக்ஸிக் படத்தை தேர்வு செய்தது ஏன்? நடிகர் யஷ் விளக்கம்!

கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது ம... மேலும் பார்க்க

அமரன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் என... மேலும் பார்க்க

தேசிய விருதுக்குப் பிறகும் கிண்டல்களால் பாதிக்கப்படும் ஆலியா பட்..!

2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமான நடிகை ஆலியா பட் கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார்.ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ர... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் 6 தமிழ் படங்கள்!

ஓடிடி தளங்களில் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகின்றன. இப்படங்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய படங்கள் குறித்து மக்கள் மத்தியில்... மேலும் பார்க்க

100ஆவது பட்டத்துக்கான காத்திருப்பு..! பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து விலகிய ஜோகோவிச்!

செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் இதை ஜோகோவிச் அறிவித்தார். அதில் கூறியதாவது: இந்தாண்டு நடைபெறும் ரோ... மேலும் பார்க்க

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஓய்வு!

இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.16 ஆண்டுகளாக சர்வதேச ஹாக்கி போட்டிகளில் விளையாடியுள்ள ராணி ராம்பால் தனது தந்தையின் தொழ... மேலும் பார்க்க