ஜெயங்கொண்டத்தில் ஆா்ப்பாட்டத்துக்கு முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 6 போ் கைது
அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி, அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்டிபிஐ -யினா் 6 போ் கைது செய்யப்பட்டனா்.
திரைப்படத்தில், இஸ்லாமியா்களை அவமதிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டதாகக் கூறி ஜெயங்கொண்டத்தில் உள்ள திரையரங்கம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்டிபிஐ கட்சி தொகுதிச் செயலா் அமீன் சுல்தான் உள்ளிட்ட 6 பேரை ஜெயங்கொண்டம் காவல் துறையினா் கைது செய்து பின்னா் அனுப்பி வைத்தனா்.