செய்திகள் :

டேவிட் வார்னரைப் போல மெக்ஸ்வீனி விளையாட தேவையில்லை: பாட் கம்மின்ஸ்

post image

டேவிட் வார்னரின் ஸ்டிரைக் ரேட்டில் மெக்ஸ்வீனி விளையாடத் தேவையில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 22) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: “அமைதியாக இருங்கள்...” கௌதம் கம்பீருக்கு முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் அறிவுரை!

இந்த நிலையில், டேவிட் வார்னரின் ஸ்டிரைக் ரேட்டில் மெக்ஸ்வீனி விளையாடத் தேவையில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்)

இது தொடர்பாக பாட் கம்மின்ஸ் பேசியதாவது: டேவிட் வார்னர் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். அவருக்குப் பதிலாக தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் விளையாடவுள்ள நாதன் மெக்ஸ்வீனி அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். அவரது இயல்பான ஆட்டம் அப்படி இல்லாத பட்சத்தில், அவர் டேவிட் வார்னரைப் போல 80 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடத் தேவையில்லை. உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் இருவரும் குயின்ஸ்லாந்துக்காக தொடக்க ஆட்டக்காரர்களாக இணைந்து விளையாடியுள்ளனர் என்றார்.

இதையும் படிக்க: நீண்ட காலம் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி கொடுத்த அறிவுரை!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் டேவிட் வார்னர் ஓய்வு பெற்ற நிலையில், பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான தொடக்க வீரராக நாதன் மெக்ஸ்வீனியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட... மேலும் பார்க்க

ரூ.14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி!

பிரபல வீரர் கே.எல்.ராகுலை டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மெகா ஏ... மேலும் பார்க்க

முகமது சிராஜை வாங்கிய குஜராத் அணி!

வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்... மேலும் பார்க்க

ரூ.18 கோடிக்கு சாஹலை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி!

ஐபிஎல் மெகா ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

ஐபிஎல் மெகா ஏலம்: டேவிட் மில்லர் - லக்னௌ, ஸ்டார்க் - டெல்லி அணி

ஐபிஎல் மெகா ஏலத்தில் டேவிட் மில்லரை, லக்னௌவும், மிட்செல் ஸ்டார்க்கை டெல்லி அணியும் வாங்கியுள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று த... மேலும் பார்க்க

ரூ.10 கோடிக்கு ஏலம் போன முகமது ஷமி!

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.SOLD! Mohammad Shami goes to @S... மேலும் பார்க்க