செய்திகள் :

IPL Mega Auction : 'கே.எல்.ராகுலை வாங்க முயன்ற CSK; சர்ப்ரைஸ் கொடுத்த சஹால்!'

post image
ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் நடந்து வருகிறது. 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டிருக்கும் இந்த ஏலத்தின் 'Marquee Set2' இப்போது முடிந்துள்ளது. கே.எல்.ராகுல், ஷமி, சிராஜ், மில்லர் என முக்கிய வீரர்கள் இந்த செட்டில் ஏலம் விடப்பட்டிருந்தனர்.
Shami

'Marquee Set 2' இல் முதல் வீரராக ஷமி ஏலம் விடப்பட்டார். செட் 1 இல் அர்ஷ்தீப் சிங்குக்கு முயற்சி செய்த சென்னை இங்கே ஷமிக்கும் முயற்சி செய்தது. சென்னையோடு கொல்கத்தா போட்டி போட்டது. 8 கோடி வரை சென்னை அணி ரேஸில் இருந்தது. அதன்பின் சென்னை பின் வாங்க லக்னோ உள்ளே நுழைந்தது. கொல்கத்தா தொடர்ந்து ரேஸில் நிற்க சன்ரைசர்ஸ் திடீரென உள்ளே வந்து ஷமியை 10 கோடி ரூபாய்க்கு அள்ளிச் சென்றது.

அதிரடி பேட்டரான டேவிட் மில்லரை எடுக்க பெங்களூருவும் டெல்லியும் கடுமையாக மோதின. இந்த ரேஸில் ஒரு கட்டத்தில் லக்னோ உள்ளே வந்தது. 7 கோடியை ஏலம் தாண்ட பெங்களூருவும் டெல்லியும் பின் வாங்கின. இறுதியாக 7.5 கோடிக்கு லக்னோ அணியால் மில்லர் வாங்கப்பட்டார். ஷமி, மில்லர் இருவருக்குமே குஜராத் அணி RTM கார்டை பயன்படுத்தவில்லை.

அனுபவமிக்க ஸ்பின்னரான சஹால் அடுத்ததாக ஏலத்துக்கு வந்தார். சஹாலுக்கு குஜராத் அணி கையை தூக்கி தொடங்கி வைத்தது. சென்னையும் ரேஸில் இணைந்தது. 5 கோடி வரைக்கும் இரண்டு அணிகளும் மாறி மாறி கையை தூக்கின. இதன்பின் இரண்டு அணியும் பின் வாங்க, லக்னோவும் பஞ்சாபும் போட்டி போட்டு சஹாலின் விலையை 10 கோடிக்கும் மேல் அதிகரித்துவிட்டன. 14 கோடியை எட்டிய சமயத்தில் லக்னோ பின் வாங்க ஏலம் முடியும் தருவாயில் பெங்களூரு உள்ளே நுழைந்து போட்டிக்கு வந்தது. பெங்களூருவையும் பஞ்சாப் வெல்ல திடீரென சன்ரைசர்ஸ் உள்ளே நுழைந்து விலையை ஏற்றியது. ஒருவழியாக போராடி சஹாலை 18 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.

Yuzvendra Chahal

கடந்த சீசன் வரை பெங்களூருவுக்காக ஆடிய சிராஜின் பெயர் ஏல அரங்கில் உச்சரிக்கப்பட்டது. குஜராத் ஏலத்தை தொடங்கியது. சென்னையும் சிராஜூக்கு முயற்சி செய்ய தொடங்கியது. பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சென்னை அணி கையை தூக்கிக் கொண்டிருந்தது. ஆனால், 8 கோடியை நெருங்கியவுடன் பின் வாங்கிவிடுவார்கள். சிராஜூக்கும் அதையேத்தான் செய்தார்கள். அடுத்ததாக ராஜஸ்தானுடன் போட்டியிட்டு குஜராத் அணி 12.25 கோடிக்கு சிராஜை வாங்கியது.

இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி வீரரான லிவிங்ஸ்டனுக்காக பெங்களூருவும் சன்ரைசர்ஸூம் மோதின. 7.25 கோடியை எட்டிய நிலையில் சன்ரைசர்ஸ் ரேஸிலிருந்து விலக சென்னை உள்ளே வந்தது. ஆனால், சென்னை பெரிதாக போட்டியளிக்கவில்லை. 8.75 கோடிக்கு லிவிங்ஸ்டனை பெங்களூரு வாங்கிவிட்டது.

கடந்த மூன்று சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலும் இந்த செட்டில்தான் வந்தார். கொல்கத்தாவும் பெங்களூருவும் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே கடுமையாக முயற்சி செய்தனர். கர்நாடகாவை சேர்ந்தவர் மற்றும் முன்பே பெங்களூர் அணிக்காக ஆடியவர் என்பதால், அந்த அணி அவர் மீது தீவிர ஆர்வம் காட்டியது. ஆனால், 11 கோடியை எட்டிய நிலையில் அந்த அணியும் பின் வாங்கியது. உடனே கொல்கத்தாவுடன் டெல்லி போட்டி போட தொடங்கியது.

கே.எல்.ராகுல்
12 கோடியில் கொல்கத்தாவும் வெளியேறிவிட, திடீர் சர்ப்ரைஸாக 12.25 கோடியிலிருந்து சென்னை அணி உள்ளே வந்தது. 13.75 கோடி வரை சென்னை கையை தூக்கிவிட்டு பின் வாங்கியது. இறுதியில் 14 கோடிக்கு ராகுல் டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.

IPL Mega Auction : 'மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் அஷ்வின்!' - ராஜஸ்தானோடு போட்டி போட்டு வென்ற CSK!

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் நடந்து வருகிறது. 500 வீரர்களுக்கும் மேல் இந்த ஏலத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். இதில் பேட்டர்களுக்கான செட் ஒன்று ஏலம் விடப்பட்டது. இதில் சென்னை அணி தங்களின் டெவான் கான்வே... மேலும் பார்க்க

IPL Mega Auction: 'கே.எல்.ராகுல், ஷமி, சிராஜ்' - ஏலத்தில் CSK தவறவிட்ட வீரர்கள் யார் யார் தெரியுமா?

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் நடந்து வருகிறது. 500 வீரர்களுக்கும் மேல் இந்த ஏலத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். முக்கியமான வீரர்களை உள்ளடக்கிய Marquee Set 1, 2 ஆகியவை முடிவடைந்திருக்கிறது. இதில், சென்னை... மேலும் பார்க்க

IPL Mega Auction : 'உச்சபட்ச விலைக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர்; ரிஷப் பண்ட்!' - பரபரக்கும் ஏலம்!

ஐ.பி.எல் மெகா ஏலம் பிரமாண்டமாக சவுதியில் நடந்து வருகிறது. 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ளும் இந்த ஏலத்தில் முதல் Marquee Set இப்போது முடிந்திருக்கிறது. ஸ்ரேயாஷ் ஐயர், ரிஷப் பண்ட் உட்பட ஸ்டார்... மேலும் பார்க்க

AusvInd: 'திணறிய பேட்டர்கள்; காப்பாற்றிய பும்ரா' - பெர்த் டெஸ்ட்டின் முதல் நாள் எப்படியிருந்தது?

கிட்டத்தட்ட ஒரு உலகக்கோப்பைக்கு நிகரான எதிர்பார்ப்புதான் பார்டர் கவாஸ்கர் தொடரின் மீதும் இருந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளுமே சமீபமாக சுமாராக ஆடி வருவதால் எந்த அணி தங்களின் ஃபார்மை மீட்டெ... மேலும் பார்க்க

AusvInd : 'டிஃபன்ஸை மறந்த இந்திய வீரர்கள்' - பெர்த்தில் தடுமாறியதன் பின்னணி என்ன?

பார்டர் கவாஸ்கர் தொடர் இன்று தொடங்கியிருக்கிறது. பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டர்கள் மிக மோசமாக ஆடி சொதப்பியிருக்கின்றனர். வெறும் 150 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆகி... மேலும் பார்க்க

KL Rahul: 'சொதப்பிய 3rd அம்பயர்; ஏமாற்றப்பட்டாரா கே.எல்.ராகுல்?' - என்ன நடந்தது?

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் பெர்த்தில் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 51-4 என திணறி வருகிறது. கொஞ்சம் நன்றாக ஆடிக்கொண்டிருந்த கே... மேலும் பார்க்க