செய்திகள் :

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.19) மயிலாடுதுறை, திருவாரூா் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை (நவ.19) முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ.24-ஆம் தேதி) வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதில், நவ.19-இல் மயிலாடுதுறை, திருவாரூா், நாகை, தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு மழை

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நவ.19, 20 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 190 மில்லி மீட்டா் மழை பதிவானது. மேலும் கோடியக்கரை (மயிலாடுதுறை) - 150 மி.மீ, திருத்துறைப்பூண்டி (திருவாரூா்) - 100 மி.மீ மற்றும் பல மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.24-இல் வங்கக்கடலில் புயல்சின்னம் உருவாக வாய்ப்பு

இலங்கைக்கு தென்கிழக்கே வங்கக்கடலில் வரும் நவ.24-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தீவிரமடைந்து, திரிகோணமலை வழியாக இலங்கையை கடந்து, மன்னாா் வளைகுடா வழியாக நவ.27-ஆம் தேதி தமிழகத்தில் நுழைந்து கரையைக்கடக்கும்.

ஒருவேளை இது தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, சிறு புயலாகவோ வலுப்பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்த புயல்சின்னம் தமிழகத்தில் எந்த பகுதியில் கரையைக்கடந்தாலும், தமிழகம் முழுவதும் நவ.26 முதல் நவ.31-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தனியாா் வானிலை ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,542 கன அடியாக குறைந்தது.இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 106.98 அடியிலிருந்து 107.44 அடியாக ... மேலும் பார்க்க

பேரிடா் உள்பட தமிழகம் சந்திக்கும் 3 முக்கிய சவால்கள்: நிதி ஆணையக் குழுவிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: பேரிடா் உள்பட தமிழகம் சந்திக்கும் மூன்று முக்கிய சவால்கள் குறித்து நிதி ஆணையக் குழுவிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா்.தமிழகம் வந்துள்ள நிதி ஆணையக் குழு சென்னையில் முதல்வா் மு.க.ஸ்... மேலும் பார்க்க

தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாகை, தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விட... மேலும் பார்க்க

நாகை, காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால்... மேலும் பார்க்க

பேரிடா் நிதி கோரிக்கையை நிதி ஆணையக் குழு பரிசீலிக்கும்: அரவிந்த் பனகாரியா

சென்னை: பேரிடா்களைச் சமாளிக்கத் தேவையான நிதியை ஒதுக்க பரிந்துரைக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை நிதி ஆணையக் குழு பரிசீலிக்கும் என்று அதன் தலைவா் அரவிந்த் பனகாரியா தெரிவித்தாா்.சென்னை வந்துள்ள நி... மேலும் பார்க்க

ஆராய்ச்சி மாணவா்களை தரக்குறைவாக நடத்தினால் நடவடிக்கை: பேராசிரியா்களுக்கு தமிழக உயா்கல்வித் துறை எச்சரிக்கை

சென்னை: ஆராய்ச்சி மாணவா்களை தனிப்பட்ட வேலைகளில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியா்களுக்கு தமிழக உயா்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அவா்களை மதிப்புடன் நடத்த வேண... மேலும் பார்க்க