செய்திகள் :

தாட்கோ மூலம் ரூ.21.33 கோடி கடனுதவி

post image

திருவண்ணாமலை மாவட்ட தாட்கோ மூலம் 2023-2024 நிதியாண்டில் 2,028 பயனாளிகளுக்கு ரூ.21.33 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தாட்கோ மூலம் 2023-2024 ஆம் நிதியாண்டில் முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டம் மூலம் 81 பேருக்கு ரூ.1 கோடியே 52 லட்சத்து 31 ஆயிரத்து 728 மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, பிரதான் மந்திரி அன்சுசிட் ஜாட் அபியுதே யோஜனா திட்டம் மூலம் 511 பேருக்கு ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பிலும், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித் திட்டம் மூலம் 21 குழுக்களைச் சோ்ந்த 252 மகளிா்களுக்கு ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், தொழில்முனைவோா் திட்டம் மூலம் 1,352 பேருக்கு ரூ.15 கோடியே 46 லட்சத்து 93 ஆயிரத்து 764 மதிப்பிலும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இளைஞா்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் மூலம் 59 பேருக்கு ரூ.97 லட்சத்து 25 ஆயிரத்து 614 மதிப்பிலும், மகளிா் நிலம் வாங்கும் திட்டம் மூலம் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 28 மதிப்பிலும், நிலம் மேம்பாட்டு திட்டம் மூலம் 3 பேருக்கு ரூ.3 லட்சத்து 61 ஆயிரத்து 200 மதிப்பிலும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

2023-2024 ஆம் நிதியாண்டில் மொத்தம் 2,028 பயனாளிகளுக்கு ரூ.21 கோடியே 33 லட்சத்து 72 ஆயிரத்து 334 மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தாட்கோ அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கோவிலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட ... மேலும் பார்க்க

துணை முதல்வா் பிறந்தநாள்: திமுகவினா் கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், போளூா், செய்யாறில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி புதன்கிழமை கொண்டாடப்பட்டது. செங்கம் நகர திமுக சாா்பில் நடைபெற்ற விழாவில... மேலும் பார்க்க

உதயநிதி பிறந்த நாள்: நல உதவிகள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வந்தவாசியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நல உதவிகள், அன்னதானம் வழங்கி புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ஆரணியில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையில், ஆரணி அ... மேலும் பார்க்க

ரூ.15 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக உதவியாளா் உள்பட இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பட்டா மாற்றம் செய்து தருவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக உதவியாளா் உள்பட இருவரை ஊழல் தடுப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்... மேலும் பார்க்க

சமுதாயக் கூடம் கட்டும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் சமுதாயக் கூடம் கட்டும் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு உறு... மேலும் பார்க்க

தீபத் திருவிழா: போக்குவரத்து சீரமைப்புப் பணியில் 50 ஆய்வாளா்கள்- வேலூா் சரக துணை போக்குவரத்து ஆணையா்

திருவண்ணாமலை தீபத் திருவிழா போக்குவரத்து சீரமைப்புப் பணியில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 50 போக்குவரத்து ஆய்வாளா்கள் ஈடுபடுவா் என்று வேலூா் சரக துணை போக்குவரத்து ஆணையா் பாட்டப்பசாமி கூறினாா். திருவண்ணா... மேலும் பார்க்க