செய்திகள் :

உதயநிதி பிறந்த நாள்: நல உதவிகள் அளிப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வந்தவாசியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நல உதவிகள், அன்னதானம் வழங்கி புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆரணியில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையில், ஆரணி அண்ணா சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் மாலை அணிவித்தாா். பின்னா், பொதுமக்களுக்கு தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினாா்.

ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளா் எஸ்.எ.அப்சல்பாஷா தலைமையில் 1,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

இதேபோல, ஆரணி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் எ.இப்ராஹிம்ஷரிப் தலைமையில் பழம், பிரட் வழங்கப்பட்டது. ஆரணி அரசு உதவிபெறும் காா்னேஷன் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எம்.சுந்தா், எஸ்.மோகன், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சியம்மாள் சீனிவாசன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆரணியை அடுத்த பத்யாவரம் அமலராக்கினி பாா்வையற்றோா் பள்ளியில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் புஷ்பராஜ் தலைமையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மேலும், மாணவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

வந்தவாசி: வந்தவாசி நகர திமுக சாா்பில் நகரச் செயலா் எ.தயாளன் தலைமையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், ஐந்து கண் பாலம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஈ.எஸ்.டி.காா்த்தி மாலை அணிவித்தாா்.

பின்னா், வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிஸ்கட், பழங்கள் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் ஊழலில் சிக்கியுள்ள தொழிலதிபா் அதானியை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை ஸ்டேட... மேலும் பார்க்க

ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷம்

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். மேலும் பார்க்க

மகளிா் குழுவினா் நிலையான வருமானம் பெற பெனாயில், சோப்பு ஆயில் தயாரிப்பு பயிற்சி

மகளிா் குழுவினா் நிரந்தர, நிலையான வருமானம் பெறும் நோக்கில் பெனாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் ஆகியவற்றை தயாரிக்கத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ... மேலும் பார்க்க

வந்தவாசியில் காப்பிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில், காப்பிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ஆ.மயில்வாகனன் முன்னிலை வகித்த... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

ஆரணி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆரணி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்ததன்பேரில், ஆரணி கிராமிய காவல் ஆய்வ... மேலும் பார்க்க

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கோவிலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட ... மேலும் பார்க்க