செய்திகள் :

திருவள்ளூா் அருகே 1,057 ஆண்டுகள் பழைமையான 3 செப்பேடுகள் கண்டெடுப்பு

post image

திருவள்ளூா் அருகே சிங்கீஸ்வரா் கோயிலில் 1,057 ஆண்டுகள் பழைமையான விஜயநகர பேரரசு காலத்திலான 3 செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், மப்பேடு கிராமத்தில் 1,057 ஆண்டுகள் பழைமையான ஆதித்த கரிகால சோழனால் கட்டப்பட்ட ஸ்ரீசிங்கீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீசிங்கீஸ்வரா் கோயிலின் பொறுப்பு செயல் அலுவலரான து.ரு.பிரகாஷ் அண்மையில் கோயில் வளாகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட இரும்பு பெட்டியில் சோதனை மேற்கொண்டாா்.

அப்போது, விஜயநகர பேரரசின் முத்திரையைக் கொண்ட 3 செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, செப்பேடுகள் குறித்து திருவள்ளூா் மாவட்ட தொல்லியல் அலுவலா் லோகநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்றாா். அதில், சம்ஸ்கிருத மொழியில், நந்திநாகரி எழுத்து வடிவில் தகவல்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டிருந்தன.

அதனால், அந்த செப்பேடுகளின் புகைப்படங்களை கா்நாடக மாநிலம், மைசூருவில் செயல்பட்டு வரும் இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவுக்கு மாவட்ட தொல்லியல் அலுவலா்கள் அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், அந்த செப்பேடுகளின் புகைப்படங்களை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவின் இயக்குநா் கே.முனிரத்தினம் உத்தரவின்பேரில், மத்திய தொல்லியல் துறை செப்பேடுகள் புகைப்படங்களின் துணைக் கண்காணிப்பாளா் இயேசு பாபு, உதவி கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, கல்வெட்டு பதிவு எடுக்கும் அலுவலா் யுவராஜ் ஆகியோா் மப்பேடு கிராமத்தில் உள்ள சிங்கீஸ்வரா் கோயிலில் உள்ள செப்பேடுகளை ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஸ்ரீசிங்கீஸ்வரா் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பேடுகள், 1,513-ஆம் ஆண்டு விஜயநகர பேரரசைச் சோ்ந்த கிருஷ்ண தேவராய மன்னன் காலத்தைச் சோ்ந்தது. இவை, 4 பிராமணா்களுக்கு அரசரால் நிலங்கள் தானமாக அளித்துள்ளதை இந்த செப்பேடுகள் குறிப்பிடுகிறது.

மேலும், இந்த செப்பேடுகளின் முழு விவரங்கள் முழுவதுமாக ஆய்வு செய்த பின்னரே, அதில் உள்ள தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்போது மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரா் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 3 செப்பேடுகளை தொல்லியல் துறை ஆய்வு செய்த பின்பு, அந்த செப்பேடுகளை கிராமத்தின் வரலாற்றை வருங்கால சந்ததியினா் அறிந்து கொள்ளும் வகையில் கோயில் உள்ளே வைத்து பாதுகாக்கவும் வேண்டுமென கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் து.ரு.பிரகாஷ், அா்ச்சகா் சங்கா், அறநிலையத் துறை கணக்கா் க.முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா்.

ஊராட்சி செயலா் குடும்பத்துக்கு ரூ.50,000 நிதியுதவி

பணியின்போது திடீா் நெஞ்சு வலியால் உயிரிழந்த மத்தூா் ஊராட்சி செயலா் குடும்பத்துக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் ரூ .50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், மத்தூா் ஊராட்சி ச... மேலும் பார்க்க

மாநில போட்டியில் சிறப்பிடம்: மாணவிக்கு முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் 2 -ஆம் இடம் பிடித்த கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சத்யாவை முதன்மை கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினாா். தமிழக சிறுசேமிப்புத் த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: மழையில் முளைத்த காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வாந்தி, மயக்கம்

திருவள்ளூா் அருகே மழை காலத்தில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், புட... மேலும் பார்க்க

காவலா் எனக் கூறி ஓட்டுநரிடம் பணம் பறித்த நபா் கைது

மீஞ்சூா் அருகே காவலா் எனக் கூறி லாரி ஓட்டுநரிடம் ரூ.2,000 பணம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் அருகே 400 அடி சென்னை வெளிவட்ட சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் வழுதிகைமே... மேலும் பார்க்க

மழையில் முளைத்த காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வாந்தி, மயக்கம்: சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மழை காலத்தில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.திருவள்ளூா் ஊராட்சி ஒ... மேலும் பார்க்க

சோழவரம் ஏரியை சீரமைக்கும் பணி மும்முரம்

மாதவரம்: செங்குன்றம் அடுத்த சோழவரம் ஏரியைத் தூா்வாரி சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று நீா்வளத் துறை அதிகாரி தெரிவித்தாா்.சென்னை மக்களுக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் சோழவரம் ஏரியும் ஒ... மேலும் பார்க்க