செய்திகள் :

தில்லியில் பள்ளியருகே வெடிவிபத்து? காவல்துறையினர் விசாரணை!

post image

தில்லியில் பள்ளியருகே வெடிவிபத்து ஏற்பட்டதுபோல் சப்தம் கேட்டதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். பள்ளியருகே, ஞாயிற்றுக்கிழமை (அக்.20) காலையில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டதுபோல் சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர், தடயவியல் குழுக்கள், வெடிகுண்டு செயலிழப்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சி.ஆர்.பி.எஃப். பள்ளியின் சுற்றுச் சுவர் சேதமடைந்தும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தும், கடைகளின் பெயர்ப்பலகைகள் சேதமடைந்த நிலையிலும் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வுக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், நிலத்தடி கழிவுநீர் பாதை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

மேலும், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது, ``காலை 7.47 மணியளவில் பிரசாந்த் விஹாரில் உள்ள சி.ஆர்.பி.எஃப். பள்ளி அருகே குண்டுவெடிப்பு சப்தம் கேட்டது. அங்கிருந்து புகை மூட்டம் கிளம்புவதையும் விடியோவில் பதிவு செய்தேன்’’ என்று தெரிவித்தார்.

அப்பகுதியை தீயணைப்புக் குழுவினர் உள்பட பலர் சுற்றி வளைத்துள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பிய பழங்குடிப் பெண்! ஏன் தெரியுமா?

ஒடிஸாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100 அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநில பாஜக துணைத் தலைவரிடம் அவர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூ... மேலும் பார்க்க

நினைவேந்தல் நிகழ்வில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு!

அஸ்ஸாம் மாநிலத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தில் பிரதீவ்ப் கோகய் என்பவரின் தாயாருக்கு நினைவேந்தல் நடைபெற்றுள... மேலும் பார்க்க

இந்தூருக்கு விரைவில் முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் டபுள் டெக்கர் பேருந்து சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதன் மேயர் புஷ்யமித்ர பார்கவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 60 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்... மேலும் பார்க்க

சல்மான் கான் என்ன செய்தார்? கொலை மிரட்டல் ஏன்? விரிவாக!!

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான் கான் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை முயற்சியில் இருந்து காப்பதற்கு பல்வேறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சல்மான் கானும் காவல்துறையின... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலி

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தௌல்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்து சனிக்கிழமை இரவு 11 மணியள... மேலும் பார்க்க