அதிக லாபம், அதிக ரிஸ்க்... செக்டார் ரொட்டேஷன் ஃபண்ட்... ஶ்ரீராம் எம்.எஃப்-ன் புத...
தில்லியில் பிளஸ் 2 வரை நேரடி வகுப்பு கூடாது! உச்சநீதிமன்றம்
தேசிய தலைநகர் வலையப்(என்சிஆர்) பகுதியில் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தில்லி மற்றும் என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் மிகக் கடுமை பிரிவுக்கு சென்றதை தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தில்லியில் காற்றின் தரம் மோசமடைந்த நிலையில், பள்ளிகளில் நேரடி வகுப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எடுக்கப்படும் நேரடி வகுப்புகளுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய தலைநகர் வலையத்துக்கு உள்பட்ட அனைத்து மாநிலங்களிலும் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.
மாசு அளவைக் கட்டுப்படுத்த தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் என்று சொல்லப்படும் கிரேப்-4 கட்டுப்பாடுகள் என்சிஆர் பகுதிகளில் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரக் குறியீடு 450 புள்ளிகளுக்கு கீழ் சென்றாலும், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும் வரை கிரேப் - 4 தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், குடிமக்கள் மாசு இல்லாத சூழலில் வாழ்வதை உறுதி செய்வது மாநில மற்றும் மத்திய அரசின் அரசியலமைப்பு கடமை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையும் படிக்க : வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை! தில்லி முதல்வர்
கிரேப்-4 அமல்
தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் மிக கடுமையான பிரிவுக்கு சென்றதால், மாசு அளவைக் கட்டுப்படுத்த தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் என்று சொல்லப்படும் கிரேப்-4 கட்டுப்பாடுகள் இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.
நச்சுப்புகை மூட்டத்தால் மக்கள் வீட்டைவிட்டு வெளிவர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் -4 டீசல் வாகனங்களை தடை, மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் சிஎன்ஜி பேருந்துகள், சில வகை கட்டுமான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும், அரசு அலுவலக நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தில்லி - தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் (என்சிஆா்) இன்றியமையாத கட்டுமானம் மற்றும் இடிப்பு, கல் நொறுக்கும் இயந்திரங்களை மூடுவது மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.