செய்திகள் :

தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!

post image

இந்தியாவில் ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றதை, அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் பேரவைத் தேர்தல் மற்றும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், சிக்கிம், கேரளம், சத்தீஸ்கர், மேகாலயம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையும் சனிக்கிழமை (நவ. 24) நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவ. 6 ஆம் தேதி அதிகாலை முதலே எண்ணப்பட்டு, இன்று (நவ. 24) வரையில் எண்ணிக்கை தொடரப்பட்டு வருவதை டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் விமசிர்த்துள்ளார்.

எலான் மஸ்க், தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ``இந்தியாவில் ஒரே நாளில் 640 மில்லியன் வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன. ஆனால், கலிஃபோர்னியாவில் இன்னும் எண்ணப்பட்டு வருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவ. 5 ஆம் தேதி மாலையில் தொடங்கி மறுநாள் காலை வரையில் நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிவுற்றவுடனேயே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கப்பட்டு, அதிக வாக்குகளைப் பெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், சில மாகாணங்களில் இன்று வரையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கையில் தாமதம் குறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் கூறுவதாவது, ``மற்ற மாகாணங்களைவிட கலிஃபோர்னியாவில்தான் அதிகப்படியான வாக்குகள் (16 மில்லியனுக்கும் அதிகமாக) பெறப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் மின்னஞ்சல் வாக்குகள்தான் எண்ணிக்கையைத் தாமதப்படுத்துகின்றன.

2004 ஆம் ஆண்டு தேர்தலில் 67 சதவிகித வாக்காளர்கள் நேரில் வாக்களித்தனர்; ஆனால், இந்தாண்டு தேர்தலில் 90 சதவிகித வாக்காளர்கள் மின்னஞ்சல் மூலம் வாக்களித்தனர். சிலர் அஞ்சல் மூலமாகவும் வாக்களிப்பர். இந்த அஞ்சல் வாக்குகளில் சிலர் கையொப்பத்தை மறந்துவிடுவது, தவறான இடத்தில் கையொப்பமிடுவது, சரியான உறையில் தங்கள் வாக்குச்சீட்டை இணைக்காதது போன்ற பிழைகளால் வருவதாலும் தாமதமாகின்றன.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!

இவ்வாறான பிழையுள்ள வாக்குச் சீட்டுகளைச் சரிசெய்ய டிசம்பர் 1 ஆம் தேதி வரையில் கெடு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அந்தந்த வாக்காளர்களை கண்டுபிடிப்பது கடினமானாலும், செய்யத்தான் வேண்டியிருக்கிறது.

மேலும், சனிக்கிழமை (நவ. 23) நிலவரப்படி, 1,29,286 வாக்குச் சீட்டுகளில் பிழைத் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஃபுளோரிடாவில் 25 சதவிகித வாக்காளர்கள் மட்டுமே அஞ்சல் மூலம் வாக்களித்தனர். மேலும், அதன் முடிவுகள் தேர்தல் நாள் இரவிலேயே 99 சதவிகிதம் வரையில் எண்ணப்பட்டு விட்டன’’ என்று தெரிவிக்கின்றனர்.

எம்.பி. சு. வெங்கேடசனை விமர்சித்த பாஜக செயலர்!

பட்டயக் கணக்காளர் தேர்வு தேதியை மாற்றியமைக்குமாறு எம்.பி. சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்ததை விமர்சித்து தமிழக பாஜக செயலாளர் பதிலளித்துள்ளார்.தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை நாள்களில் பட்டயத் தேர்வுக... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு எப்போது? ராகுல் பங்கேற்பாரா?

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தி... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு!

உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளில் மேலும் 2 குழந்தைகள் சனிக்கிழமை பலியாகின. உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டம் தில்லியில் தொடங்கியது. இதில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாகத் த... மேலும் பார்க்க

மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு: உ.பி.யில் பதற்றம்!

உத்தர பிரதேசத்தில் ஜாமா மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தி கலவரத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.உத்தர பிரதேச மாநிலம், சம்பல் ம... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் குடிசைப்பகுதியில் தீ விபத்து

கொல்கத்தாவில் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குடிசைகள் எரிந்து நாசமடைந்தன. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் உல்டடாங்கா பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.22 மணியளவில்... மேலும் பார்க்க