செய்திகள் :

தேர்தல் களத்தில் மறைமுகமாக பாஜகவை வலுப்படுத்தும் ஆர்எஸ்எஸ்!

post image

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முழுவீச்சில் பிரசரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவ. 20 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு வலுசேர்க்கும் விதமாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வீடுவீடாக பிரசாரம் மேற்கொண்டு சத்தமின்றி வாக்காளர்களைச் சந்தித்து வருகின்றனர்.

பாஜகவின் கருத்தியல் வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பு மகாராஷ்டிரத்தில் பாஜக வேட்பாளர்கள் வலுவாக இல்லாத தொகுதிகளில் அவர்களை வாக்கு வங்கியை உயர்த்த அதற்கான திட்டங்களுடன் செயல்பட்டு வருகின்றனர்.

நேரடியாக அரசியலில் ஈடுபடாத ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஹிந்துத்துவா, தேசியவாத பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவன் மூலம் பாஜக ஆதரவு பிரசாரத்தை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாஜக தனித்த அரசியல் உத்திகளுடன் செயல்படுகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில், ​​இரு அமைப்புகளும் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர். ஆர்எஸ்எஸ் அதன் மறைமுக பங்களிப்பை தொடரும் அதே நேரத்தில், பாஜக நேரடி களத்தில் கவனம் செலுத்துகிறது.

இதையும் படிக்க | இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உடைப்போம்: ராகுல் காந்தி

இதுகுறித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் ஒருவர் ”எதிர்க்கட்சிகளை நோக்கி பாஜக கள அரசியல் செய்துவரும் வேளையில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வீடுவீடாக சென்று மறைமுக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் உள்ள நகரப் பகுதிகள் அனைத்திலும் ஆயிரக்கணக்காணக் கூட்டங்களை கரசேவகர்கள் தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அரசியல் சூழ்ச்சிகளால் ஹிந்துத்துவம் பலவீனமடைந்து வருவதாகவும் அவர்கள் பேசி வருகின்றனர்.

ஒவ்வொரு கிராமங்கள் மற்றும் வார்டுகளிலும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. முக்கியமாக பாஜக வலுவின்றி இருக்கும் தொகுதிகளில் அதிகளவில் பிரசாரம் செய்யப்படுகின்றது.

ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “சாதிய பாகுபாடுகளைக் கடந்து ஹிந்துத்துவா மற்றும் பாரதத்திற்காக ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுகூடவேண்டுமென்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஏனென்றால், இவை இரண்டும் உள் மற்றும் வெளிநாட்டு சக்திகளால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

பாஜகவுக்காக செய்யும் மறைமுக பிரசாரத்தில் ஹிந்துக்கள் வங்கதேசத்தில் ஒடுக்கப்படுவது குறித்தும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் இருப்பது குறித்தும் தொடர்ந்து கரசேவகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இது ஹிந்துத்துவத்திற்கும், பாரதத்திற்கும் எதிரான கேவலமான செயல்திட்டத்தை அம்பலப்படுத்துவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படிக்க | தில்லி கல்லூரி முதல் இலங்கை பிரதமர் வரை... அமரசூரிய யார்?

வாக்குப்பதிவு தேதி அறிவிப்பதற்கு 6 மாதங்கள் முன்னரே மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்டில் ஆர்எஸ்எஸ் தனது தொண்டர்கள் மூலம் தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளது. பாஜக தனது மஹாயுத்தி கூட்டணியின் தேர்தல் உத்திகளை ஆர்எஸ்எஸ் உடன் பகிர்ந்து பிராசரத்தை மேற்கொண்டுள்ளது.

“பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பலவீனமாக அடையாளம் காணப்பட்ட முக்கிய தொகுதிகள் ஆர்எஸ்எஸ் உடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், இந்துத்துவ மற்றும் பாரதத்தின் ஒற்றுமைக்கு ஆபத்தை எதிரொலிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் வாக்காளர்களைத் தங்கள் வசம் இழுக்கும் பணியைத் தொடங்கினர், ”என்று பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.

தில்லியில் காற்று மாசு எதிரொலி: விமான சேவை பாதிப்பு!

புதுதில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் எதிரொலியாக, தில்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.தில்லியின் பெரும்பாலான இடங்களிலும், அடர்த்தியான புக... மேலும் பார்க்க

உ.பி.: மருத்துவமனை தீ விபத்து - மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின்போது மீட்கப்பட்ட ஒரு குழந்தை, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளது.ஜான்சி அரசு மர... மேலும் பார்க்க

தாராவி நிலத்தை அரசு அதானிக்கு தாரைவார்க்கலாமா? - தேர்தல் பிரசாரத்தில் காங்.

தாராவி நிலத்தை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் தலைவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சாரப் பதிவுகள் அமைந்துள்ளன. மகாராஷ்டிரத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு, வரும் நவ.20-ஆம் தேதி ஒரே கட்டம... மேலும் பார்க்க

ஜார்க்கண்டிலும் புல்டோசர் அரசியல்! தேர்தல் பிரசாரம் நிறைவு!

ஜார்க்கண்ட் மாநில பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவினர் புல்டோசர் அரசியலை குறிப்பிட்டுப் பேசியுள்ளது இப்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர... மேலும் பார்க்க

தங்கம் விலை 9% சரிவு! நிபுணர்கள் கூறுவது என்ன?

தங்கத்தின் விலை அதன் உச்சபட்ச விலையிலிருந்து 9 சதவீதம் சரிந்துள்ளது. தங்கத்தின் இந்த தொடர் விலைச்சரிவை நிபுணர்களும் ஆதரிக்கின்றனர். அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கம் காரணமாக சர்வதேச சந்தையில் தங... மேலும் பார்க்க

இறந்ததாகக் கருதி இறுதிச் சடங்கு.. 5 நாள்களுக்குப் பின் திரும்பியவர்! அதிர்ச்சியில் குடும்பம்

அகமதாபாத்; குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே விஜபூரைச் சேர்ந்த பிரிஜேஷ் சுதர் இறந்துவிட்டதாக நினைத்து அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்த 5 நாள்களுக்குப் பின் அவர் உயிரோடு திரும்பியதால், குடும்பத்தினர் ஆனந... மேலும் பார்க்க