செய்திகள் :

தொடரும் விமான வெடிகுண்டு மிரட்டல்கள்: சுமார் ரூ. 600 கோடி இழப்பு

post image

புது தில்லி: இந்திய நிறுவனங்களின் சுமார் 50 விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் செவ்வாய்க்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

இத்துடன், கடந்த திங்கள்கிழமை இரவுமுதல் மொத்தம் 80 உள்நாட்டு-சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், 3 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமான நிறுவனங்களுக்கு கடந்த 9 நாள்களில் சுமார் ரூ. 600 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் தலா 13 விமானங்கள், ஆகாசா ஏர் நிறுவனத்தின் 12 விமானங்கள், விஸ்தாரா நிறுவனத்தின் 11 விமானங்களுக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை இரவில், இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களின் தலா 10 விமானங்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

இதில் பெங்களூரு-ஜெட்டா (சவூதி அரேபியா) இடையிலான விமானம் தோஹாவுக்கும் (கத்தார்), கோழிக்கோடு-ஜெட்டா (சவூதி அரேபியா) இடையிலான விமானம் ரியாத்துக்கும் (சவூதி அரேபியா), தில்லி-ஜெட்டா இடையிலான விமானம் மதினாவுக்கும் (சவூதி அரேபியா) திருப்பி விடப்பட்டன.

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட விமானங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதர பாதுகாப்பு நடைமுறைகளுக்கு பின் விமானங்கள் புறப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்துடன், கடந்த ஒரு வாரத்தில் 170-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளம் மூலம் இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்கதையாகிவரும் நிலையில், இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்றனர்.

50 காசுக்காக ரூ.15 ஆயிரத்து 50 காசு இழப்பீடு! அஞ்சல் துறைக்கு தண்டம்!

உரிய கட்டணத்தைவிட அதிக கட்டணமாக 50 காசு வசூலித்த அஞ்சல் துறைக்கு ரூ.15 ஆயிரத்து 50 காசு இழப்பீடாக வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கெருக... மேலும் பார்க்க

உ.பி. இடைத்தேர்தல்: அனைத்து தொகுதிகளையும் சமாஜவாதிக்கு விட்டுக் கொடுக்கும் காங்கிரஸ்?

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் சமாஜவாதி கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகள... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது டானா புயல்!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை காலை புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், கடந்த 6 மணிநேரமாக மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சிவசேனை!

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை சிவசேனை வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான 45 வேட்பாளர் பெயர் பட்டியலை சிவசேனை கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்த... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜேஎம்எம்!

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) வெளியிட்டுள்ளது.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள முதல் வேட்பாளர் பட்டியலில் 35 ... மேலும் பார்க்க

ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு: தெலங்கானா அமைச்சா் சுரேகா மீது பிஆா்எஸ் செயல் தலைவா் தாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கொன்டா சுரேகாவுக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி. ராமா ராவ் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளாா்.கே.ட... மேலும் பார்க்க