"சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் அக்., 18 வரை நீட்டிப்பு; அரசுப் பள்ளிகளுக்கு விட...
தொடர்ந்து உயரும் வெள்ளியை வாங்கிக் குவிக்கும் ரஷ்யா; இது அமெரிக்காவிற்கு எதிரான ரஷ்யாவின் உத்தியா?
தினம் தினம் தங்கம் விலை அதிகரித்து வருவதுபோல, வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.
இந்த வெள்ளி விலை உயர்விற்கு, தங்கம் விலை உயர்வும், வெள்ளியின் தேவையும் தான் காரணம்.
இந்த நிலையில், 'ரஷ்யா தொடர்ந்து வெள்ளியை வாங்கி குவித்து வருகிறது' என்கிற புதிய தகவலை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

"தற்போது ரஷ்யாவின் மத்திய வங்கி வெள்ளியை வாங்கி குவித்து வருகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை உலக நாடுகளின் வங்கி, வெள்ளியை வாங்கிக் குவித்ததைப் பெரிதாகக் கேள்விப்பட்டதில்லை.
தங்கத்தைத் தான் அதன் மதிப்பு கருதி உலக வங்கிகள் வாங்கும். வெள்ளி பெரும்பாலும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தான் பயன்படுத்தப்படும்.
அப்படியிருக்கையில், ரஷ்யா வெள்ளியை வாங்கிக் குவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
வெள்ளை மாளிகையும், வெள்ளியும்
கடந்த மாதம், வெள்ளை மாளிகை அரிய கனிமங்களின் பட்டியலில் வெள்ளியைச் சேர்த்தது. இது வெள்ளியின் விலையை உயர்த்தலாம் என்று அப்போது கணிக்கப்பட்டது.
அநேகமாக, அப்போதிருந்துதான் ரஷ்யா வெள்ளியை வாங்கத் தொடங்கியிருக்கும்.
ரஷ்யா - உக்ரைன் போரை முன்னிட்டு, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குபவர்கள் மீது வரி விதிக்கப்படுகிறது. ஆனால், வெள்ளி தங்கள் வசம் இருந்தால், இந்த விஷயத்தில் தங்கள் மீது வரி விதிக்க முடியாது என்று ரஷ்யா கருதலாம்.
காரணம், தொழிற்சாலைகளில் மில்லியன் கணக்கில் வெள்ளியின் பயன்பாடு இருக்கிறது.
அதனால், இது ரஷ்யாவின் புதிய உத்தியாக இருக்கலாம்".
பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள 'Vikatan Play'-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள்.
