"சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் அக்., 18 வரை நீட்டிப்பு; அரசுப் பள்ளிகளுக்கு விட...
Dude: ``ரஜினி கமல் இணையும் படத்தை இயக்குகிறாரா பிரதீப் ரங்கநாதன்?" - பிரதீப் சொல்லும் பதில் என்ன?
பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டியூட்' திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
`லவ் டுடே', `டிராகன்' என இரு வெற்றிப் படங்களுக்குப் பிறகு இத்திரைப்படம் திரைக்கு வருவதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டியூட்' படத்தை இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் `ஹாலிவுட் ரிப்போர்டர்' ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு பேட்டியளித்திருக்கிறார்.
தொகுப்பாளர் அனுபமா சோப்ரா, ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நீங்கள் இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வந்ததே, நீங்கள்தான் இயக்குகிறீர்களா?'' எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தந்த பிரதீப் ரங்கநாதன், நான் அந்தப் படத்தை இயக்கவில்லை. நான் இப்போது நடிப்பின் பக்கம் கவனம் செலுத்தி வருகிறேன்.
அப்படத்தைப் பற்றி இப்போது அதிகமாக என்னால் பேச முடியாது." என்றவர் ரஜினி குறித்து பேசுகையில், ``நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன்.
அவருடைய திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்துவிடுவேன்.

`லிங்கா' படம் வெளியான அன்று எனக்கு தேர்வு இருந்தது. இரவு 12 மணி சிறப்புக் காட்சிக்குச் சென்று ரஜினி சாரின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்திருக்கிறேன்.
அந்தக் காணொளிகள் இப்போதும் என் பேஸ்புக் பக்கத்தில் இருக்கும். அப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி சார் பைக் ஓட்டுவது மாதிரியான காட்சி இருக்கும்.
அந்தக் காட்சியில் நடித்தது டூப் என்பது தெரியும். இருப்பினும் என்னை சமாதானம் செய்துகொண்டு படத்தைக் கொண்டாடினேன் (சிரித்துக்கொண்டே).
`டிராகன்' படம் ரிலீஸுக்குப் பிறகு அவரைச் சந்தித்தபோது, அப்படத்தில் நான் செய்திருந்த சிகரெட் ஸ்டைலை அவர் செய்து காண்பித்தார்." எனக் கூறியிருக்கிறார்.