செய்திகள் :

Modi: 'குஜராத் முதல்வர், பிரதமர்' - இன்றோடு 25-வது ஆண்டைத் தொடும் பிரதமர் மோடி; குவியும் வாழ்த்து!

post image

இன்றோடு பிரதமர் மோடி மத்திய, மாநில அரசில் தலைமைப் பதவி வகிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகின்றன.

மோடி பதிவு

அதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது...

"இன்றுதான் 2001-ம் ஆண்டு, குஜராத்தின் முதலமைச்சராக முதன்முறையாகப் பொறுப்பேற்றேன். சக இந்தியர்களின் தொடர் வாழ்த்துகளுக்கு நன்றி. இன்றோடு அரசின் தலைமைப் பதவி வகிப்பதில் 25-வது ஆண்டுக்குள் நுழைகிறேன்.

இந்திய மக்களுக்கு என்னுடைய நன்றிகள்.

இத்தனை ஆண்டுகளாக, நமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நம்மை வளர்த்த இந்தச் சிறந்த தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதற்கும் நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

2024-ம் ஆண்டு மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற போது...
2024-ம் ஆண்டு மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற போது...

2001 டு 2025

2001-ம் ஆண்டு குஜராத் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2014-ம் ஆண்டு வரை அதே பதவியில் தொடர்ந்தார்.

பின்னர், 2014-ம் ஆண்டு இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களைக் கடந்து, இப்போதும் பிரதமராகத் தொடர்ந்து வருகிறார்.

மோடியின் 25 ஆண்டுக்கால இந்தப் பயணத்திற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கரூர் மரணங்கள்: "நாங்களே மன கஷ்டத்தில் இருக்கிறோம்" - எஸ்.ஏ. சந்திரசேகர்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் அம்மா அம்சவேணி (83) வயது மூப்பு காரணமாக இன்று (அக்.8) காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அம்சவேணியின் மகன் எல்.கே. சுதீஷின் இல்லத்தில் அம்சவேணியின் உடல... மேலும் பார்க்க

புதிய தலைமுறை முடக்கம்: `முதல்வரே, கருத்துச் சுதந்திரம் என்னவாகும்?’ - அ.குமரேசன்

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)கட்டுரையாளர்: அ.குமரேசன்நிகழ்வுகளை விமர்சனக் ... மேலும் பார்க்க

கும்பகோணம்: ``அரசுப்பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை'' - சர்ச்சையான திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் பள்ளி மேம்பாட்டு நிதியில... மேலும் பார்க்க

தொடர்ந்து உயரும் வெள்ளியை வாங்கிக் குவிக்கும் ரஷ்யா; இது அமெரிக்காவிற்கு எதிரான ரஷ்யாவின் உத்தியா?

தினம் தினம் தங்கம் விலை அதிகரித்து வருவதுபோல, வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. இந்த வெள்ளி விலை உயர்விற்கு, தங்கம் விலை உயர்வும், வெள்ளியின் தேவையும் தான் காரணம். இந்த நிலையில், 'ரஷ்யா தொடர்ந்து வெள... மேலும் பார்க்க

"ஊடகங்களை முடக்கும் பாசிச போக்கு!" - அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டதா புதிய தலைமுறை?

அரசு கேபிளிலிருந்து முன்னணி செய்தி சேனலான புதிய தலைமுறை பல பகுதிகளில் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.கரூர் சம்பவத்தில் அரசை விமர்சிக்கும் தொனியில் வெளியிடப்பட்ட செய்திகளால்தான் புதிய தலைமு... மேலும் பார்க்க

புதிய தலைமுறை : `அரசே கேபிள் நடத்தினால் இதுபோன்ற தவறுகள் நடக்கும்' - பத்திரிகையாளர் ப்ரியன்

கட்டுரையாளர்ப்ரியன், மூத்த பத்திரிகையாளர் அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனல் பிளாக் செய்யப்பட்டிருக்கிறது என்று ஊடக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாகப் பேசப்படுகிறத... மேலும் பார்க்க