மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுர...
நடந்த உண்மையைதான் அமரன் படத்தில் சொல்லியுள்ளனர் - எல்.முருகன்
நடந்த உண்மையைதான் அமரன் படத்தில் சொல்லியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜம்மு-காஷ்மீரில் நடந்ததை, உண்மை கருத்துகளை அமரன் படத்தில் சொல்லியுள்ளனர்.
அமரன் போன்ற நல்ல படங்களை வரவேற்பது நாட்டின் மீது நாம் வைத்துள்ள மரியாதை. ஒரே நாடு, ஒரே சினிமா, வடக்கு, தெற்கு என பேதம் இல்லாமல் சினிமாத் துறையை எடுத்து செல்ல பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.
போதைப்பொருள் விற்பனை- சென்னையில் துணை நடிகை கைது
சென்னை மற்றும் பெங்களூருவில் ஹாலிவுட் திரைப்படத்திற்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகின்றன. இது அதிகரிக்க வேண்டும். ஓடிடிக்கு புதிய ஒளிபரப்பு கொள்கை மூலம் சென்சார் கொண்டு வரப்படும்.
கோவா சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28 வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிவகாா்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம், தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியானது. கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி தீவிரவாதிகளுக்கு எதிரான மோதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜா் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை எடுக்கப்பட்டுள்ளது.