வந்தவாசி: வீட்டில் தந்தையின் சடலத்துடன் 5 நாள்கள் தங்கியிருந்த மகன்
நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்!
நடிகை கஸ்தூரி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். முன்னதாக, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடர்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார் எழுந்தது.
இதுதொடா்பாக அவா் மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதால், அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று(நவ. 20) விசாரணைக்கு வந்த நிலையில், நடிகை கஸ்தூரிக்கு விதிக்கப்பட்டுள்ள நீதிமன்றக் காவல் தளர்த்தப்பட்டுள்ளது.
அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நடிகை கஸ்தூரி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்.