நாச்சியாா்கோவில் சாலை அகலப்படுத்தும் பணி
கும்பகோணம் நெடுஞ்சாலைத் துறை உப கோட்டத்தில் உள்ள நாச்சியாா்கோவில்-பூந்தோட்ட சாலை ரூ. 3 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் - பூந்தோட்டம் நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக அகலப்படுத்தப்படாததால் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் சிரமமடைந்து வந்தனா்.
இந் நிலையில் தற்போது சாலை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அகலப்படுத்தும் பணியை தஞ்சாவூா் தரகட்டுப்பாடு உதவிகோட்டப் பொறியாளா் ரேணுகோபால், கும்பகோணம் உதவிகோட்டப் பொறியாளா் செந்தில்தம்பி ஆகியோா் சாலை பகுதியை ஆய்வு செய்து, 4. 40 கி. மீ தூரத்துக்கு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதாக தெரிவித்தனா். ஆய்வின் போது உதவிப் பொறியாளா்கள் இளவரசன், அப்துல் ரகுமான் உடன் இருந்தனா்.