Lokesh Kanagaraj: `உங்களின் நுண்ணறிவும், கதை சொல்லல் பேரார்வமும்' - `கூலி' படத்த...
நிறுவப்பட்டு 2 நாள்களில் திருடுபோன அம்பேத்கர் சிலை !
மத்தியப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு 2 நாள்களில் திருடு போன சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டதில் உள்ள பாரி கிராமத்தில் இரு நாள்களுக்கு முன் அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டது.
இந்தச் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதுகுறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேதிதா தாகர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
இதையும் படிக்க | ஆர்எஸ்எஸ் ஒழிக! கோஷமிட்ட காந்தியின் கொள்ளுப் பேரன்! என்ன நடந்தது?
வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டும் நோக்கில் யாரேனும் இதனைச் செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.