செய்திகள் :

நேரு காரணம்னு சொல்லாதீங்க என மோடியை சாடிய மன்மோகன்!

post image

புது தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு 8.06 மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்(92) நினைவு இழந்ததையடுத்து, 9.51 மணிக்கு உயிரிழந்ததாக அந்த மருத்துவமனை தெரிவித்தது.

மன்மோகன் சிங் மறைந்த செய்தி அறிந்தவுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோா் மருத்துவமனைக்கு விரைந்தனா்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மன்மோகன் சிங் குறித்த செயல்பாடுகள், பேச்சுகள் சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

“இதுவரை எந்தப் பிரதமரும் தரம் தாழ்ந்த பேச்சைப் பேசவில்லை. வெறுப்புப் பேச்சைப் பேசிய முதல் பிரதமர் மோடிதான்” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால், கட்சித் தலைவர்கள் கடைசிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க |மன்மோகன் சிங் மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல்

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் வாக்காளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், “பிரதமர் பதவிக்குரிய மாண்பைச் சீர்குலைத்துவிட்டார் மோடி. பிரசாரம் முழுவதும் அவர் வெறுப்புப் பேச்சைப் பேசி வருகிறார். குறிப்பிட்ட சமுதாயத்தினரைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அவரின் பிரசாரம் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் உள்ளது. இதற்குமுன் எந்த பிரதமரும் இப்படி வெறுப்புப் பேச்சையோ, கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்படுத்தவில்லை. பொது பிரசாரத்தில் கண்ணியமான பேச்சுகளைப் பேசாத முதல் பிரதமர் மோடி” என தெரிவித்தது பெரும் பேசும்பொருளானது.

மேலும், பொருளாதாரக் கொள்கை குறித்த சரியான புரிந்துணர்வு மோடி அரசிடம் இல்லை. வெளியுறவுக் கொள்கையிலும் பாஜக அரசு தோற்றுப் போய் விட்டது. சீனா நமது எல்லைக்குள் வந்து அமர்ந்திருக்கிறது. அதை தட்டிக் கேட்காமல், மக்களிடமிருந்து மறைக்கவே இந்த அரசு முயற்சித்து வருகிறது என குற்றம் சாட்டியவர், தலைவர்களை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிப்பதாலோ, ஊஞ்சலில் ஆடுவதாலோ, பிரியாணி ஊட்டுவதன் மூலமோ வெளியுறவுக் கொள்கையை கட்டமைக்க முடியாது என்பதை பிரதமர் புரிந்துகொண்டிருப்பார் என நம்புகிறேன் என வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் மோடியை கடுமையாக சாடினார் மன்மோகன் சிங்.

நேரு காரணம்னு சொல்லாதீங்க

அதேபோன்று இந்தியாவிடம் தொடர்ந்து அத்துமீறி வரும் சீனா குறித்து பேசுகையில், ஒருபுறம் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்க, மறுபுறம் கடந்த ஏழரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய மோடி அரசு, தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு, சரி செய்யாமல், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இன்னும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.பிரதமரின் பதவிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளதாக நான் உணர்கிறேன். தவறுகளை குறைத்து மதிப்பிடுவதற்காக வரலாற்றை குறை கூறுவதை விட பிரதமர் கண்ணியத்தை காக்க வேண்டும் என சிங் கூறினார். இது குறித்த விடியோ பதிவுகள் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!

அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ. 6 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல்!வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் இரு வேறு நடவடிக்கைகளில் ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 5 பேர் கைது செய்யப்பட்டி... மேலும் பார்க்க

’ஆன்மீக விடுதலை’ எனும் மூடநம்பிக்கையால் 4 பேர் தற்கொலை!

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் தாய் அவரது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் ஆன்மீக விடுதலை அடைய வேண்டும் எனும் நோக்கில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வியாசர... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழு மேடையில் நடந்தது என்ன?

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. ... மேலும் பார்க்க

உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் படுகாயம்!

புதுதில்லியில் நம்கீன் உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.தென்மேற்கு தில்லியின் நஜாஃப்கார் பகுதியில் நம்கீன் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு அடுக்கு உணவுத் த... மேலும் பார்க்க

தமிழகமும் சதுரங்கமும் - சதுரங்க வல்லபநாதர் முதல் குகேஷ் வரை..!

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனுடன் போட்டியிட்டு தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். உலக செஸ் சாம... மேலும் பார்க்க

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! 6வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த திங்களன்று (டிச.23) ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 6 வது நாளாக இன்றும் (டிச.28) தொடர்கிறது.கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் 3 வய... மேலும் பார்க்க