Red Alert - அபாய கட்டத்தை எட்டிய பூமியின் வெப்பம் | 1.5 degree heat | Climate Ch...
பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு லாபம் சரிவு!
புதுதில்லி: பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் 2024 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 52.7% சரிவடைந்தது ரூ.12.90 கோடியாக குறைந்துள்ளது.
இதுகுறித்து பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.27.28 கோடியாக இருந்தது. மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,118.33 கோடியாக இருந்தது.
இதையும் படிக்க: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உணவு செரிக்கும் தன்மை மந்தம் ஏன்?
இது கடந்த ஆண்டு ரூ.1,112.82 கோடியாக இருந்தது. பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் மொத்த செலவினம் செப்டம்பர் காலாண்டில் 3.73 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,118.80 கோடியாக உள்ளது.
நுகர்வோர் பொருட்களின் வருவாய் கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.857.57 கோடியிலிருந்து 1.24 சதவிகிதம் அதிகரித்து ரூ.868.27 கோடியாக உள்ளது. அதே வேளையில் லைட்டிங் சொல்யூஷன்ஸ் வருவாய் இரண்டு சதவிகிதம் குறைந்து ரூ.250 கோடியாக உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.41 சதவிகிதம் சரிந்து ரூ.878.60 ரூபாயாக முடிவடைந்தது.