செய்திகள் :

பயிற்சி ஆட்டத்தில் வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; இந்திய அணிக்கு பின்னடைவா?

post image

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அருந்ததி ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து வீராங்கனை ஹீதர் நைட் அடித்த பந்தினை கேட்ச் செய்ய முயன்றபோது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவக் குழு ஆடுகளத்துக்கு விரைந்தது. அருந்ததி ரெட்டி பெவிலியனுக்கு நடந்து செல்ல முயற்சி செய்தார். காலில் வலி அதிகமாக இருந்ததால், சக்கர நாற்காலி வரவழைக்கப்பட்டு அவர் பெவிலியனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான அருந்ததி ரெட்டிக்கு, உலகக் கோப்பைத் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பாக காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், அருந்ததி ரெட்டிக்கு காயம் எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. காயத்தின் தன்மையைப் பொருத்தே, அவர் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரிய வரும்.

Indian player Arundhati Reddy was injured during a World Cup warm-up match.

இதையும் படிக்க: இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக காத்திருக்கிறோம்: ஸ்மிருதி மந்தனா

வங்கதேச பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்! இறுதிக்குச் செல்ல 136 ரன்கள் இலக்கு!

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் அணி 136 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் ... மேலும் பார்க்க

இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக காத்திருக்கிறோம்: ஸ்மிருதி மந்தனா

அணியில் உள்ள அனைவரும் போட்டியை வென்று கொடுப்பவர்கள் என தங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியுடன் இணைவது எப்போது? அஜித் அகர்கர் பதில்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயத்திலிருந்து மீண்டு எப்போது அணியுடன் மீண்டும் இணைவார் என்பது குறித்து இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் பேசியுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள்... மேலும் பார்க்க

கருண் நாயரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா? - அஜித் அகர்கர் சூசகம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறித்து அணித் தேர்வர் அஜித் அகர்கர் சூசகமாக பதிலளித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க

சென்னை டூ சிட்னி..! அஸ்வினை வரவேற்று விடியோ வெளியிட்ட சிட்னி தண்டர்!

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் இணைந்ததை வரவேற்று சிட்னி தண்டர் அணி விடியோ வெளியிட்டுள்ளது.இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைப் போன்று ஆஸ்திரேலியாவில் ந... மேலும் பார்க்க

இந்திய அணி அழுத்தத்திலிருந்து விடுபட இதனை செய்ய வேண்டும்: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் அழுத்தத்திலிருந்து விடுபட இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் பேசியுள்ளார்.ஐசிசி மகளிர்... மேலும் பார்க்க