மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுர...
பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்! -துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 6-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருந்த நிலையில், மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவிய காற்று சுழற்சியால் தாழ்வுப்பகுதி உருவாவது தாமதமானது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று(நவ.9) செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
திமுக பவள விழாவை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.