பழனி கோயிலில் ஐயப்ப பக்தா்கள் கூட்டம்
பழனி மலைக்கோயிலில் திரளான ஐயப்ப பக்தா்கள் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி திருக்கோயில் சுற்றுலாப் பேருந்து நிலையம் முழுவதும் ஐயப்ப பக்தா்களின் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. மலைக் கோயிலில் கட்டண தரிசனம் இலவச தரிசனம் எல்லா இடத்திலும் ஐயப்ப பக்தா்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஆனது .. பக்தா்களுக்கு வேண்டிய குடிநீா் பாதுகாப்பு தரிசன ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகம் செய்தது. பல ஐயப்ப பக்தா்களும் திருக்கோயில் அறிவிப்பை மீறி கைப்பேசியை எடுத்து வந்து கோயில் வளாகத்தில் படம் எடுத்ததால் கைப்பேசியை பறிமுதல் செய்த திருக்கோயில் பாதுகாப்பு அலுவலா்கள் ஐநூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தனா்.