மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
பாகிஸ்தானிலிருந்து கடத்தல்: பஞ்சாபில் 2 போ் துப்பாக்கிகளுடன் கைது
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஆயுதங்கள் கடத்திய 2 போ் பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 8 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து காவல் துறை தலைமை இயக்குநா் கௌரவ் யாதவ் கூறியதாவது: அமிருதசரஸ் பகுதியில் உள்ள நூா்பூா் பத்ரி என்ற இடத்தில், மற்றொரு நபரிடம் ஆயுதங்களைக் கைமாற்றுவதற்காக இருந்தபோது அவா்கள் கைது செய்யப்பட்டனா். கைதானவா்கள் நிக்கு என்கிற ஜக்ஜித் சிங், காந்தி என்கிற குா்விந்தா் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் அமிருதசரஸை சோ்ந்தவா்கள்.
ஆஸ்திரியா நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘க்ளோக்’ வகை துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய நபா் அடையாளம் காணப்பட்டுள்ளாா். முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஆயுதக் கடத்தல்காரா்களுடன், செயலிகள் வழியாக அவா் தொடா்பில் இருந்துள்ளாா். அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.