செய்திகள் :

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!

post image

டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்காக வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர்கள் மே மாதத்தில் தொடங்கவுள்ளது.

இதையும் படிக்க: காயத்திலிருந்து மீண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்!

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 10-வது சீசன் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 18 வரை நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பிறகு, பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் தொடங்கும் எனத் தெரிகிறது.

இதற்கு முன்பாக கடந்த ஆண்டு வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

இதையும் படிக்க: ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!

வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஃபைசலாபாத், முல்தான் மற்றும் லாகூரில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநவமி விழா: பாதுகாப்பு காரணங்களால் கொல்கத்தா - லக்னௌ போட்டியில் மாற்றமா?

ராமநவமி விழா கொண்டாட்டங்களுக்காக கொல்கத்தா - லக்னௌ இடையேயான போட்டியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈட... மேலும் பார்க்க

சிஎஸ்கே - மும்பை போட்டி: இன்று டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்படவுள்ளது..சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 23ம் தேதியன்று நடைபெறும் சென்னை, மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் ... மேலும் பார்க்க

ஐபிஎல்லுக்குப் பின் வாழ்க்கையில் முக்கியப் பாடங்களை கற்றுக் கொண்டேன்! -ஹார்திக் பாண்டியா

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின் வாழ்க்கையில் சில முக்கிய பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி... மேலும் பார்க்க

வெளிநாட்டு தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது: கபில் தேவ்

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் வெளிநாட்டுப் பயணங்களில் குடும்பங்கள் வீரர்களுடன் பயணிப்பதை ஆதரித்து பேசியுள்ளார்.பிஜிடி தொடரில் இந்திய அணி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியி... மேலும் பார்க்க

விராட் கோலி ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை: ஏபி டி வில்லியர்ஸ்

விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையிருக்காது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குக... மேலும் பார்க்க

நியூசி. வீரர் மீது மோதிய பாகிஸ்தான் வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம்!

நியூசிலாந்து வீரர் மீது மோதிய பாகிஸ்தான் அணி வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொ... மேலும் பார்க்க