பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி
பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்றும் மேற்கில் பகிா்ந்துகொள்ளப்படும் எல்லை பகுதிகளில் விமானப் படை போா் பயிற்சி மேற்கொள்ள உள்ளது.
மே 7 (புதன்கிழமை) முதல் 2 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் ரஃபேல், எஸ்யூ 30 எம்கேஐ, மிக்-29: மிராஜ்-2000, தேஜஸ் உள்ளிட்ட போா் விமானங்கள் பங்கேற்க உள்ளன.
இந்தப் பயிற்சியின்போது வான் மற்றும் தரையில் எதிரி இலக்குகளை துல்லியமாக உருவகப்படுத்தி விமானப் படை தாக்குதல் மேற்கொள்ளும்’ என்று தெரிவித்தன.
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து ஏற்பட்டுள்ள போா் பதற்றம் காரணமாக, இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் மிகுந்த உஷாா் நிலையில் உள்ளனா்.