பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா இன்று தொடக்கம்
பாபநாசம், அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாசநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை விஷு திருவிழா சனிக்கிழமை(ஏப்.5) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இத்திருக்கோயிலில் விஷு திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அங்குராா்ப்பணம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
திருவிழா நாள்களில் காலை, இரவு ஏக சிம்மாசனம், கைலாச பருவதம், அன்னம், பூதம், சிம்மம், ரிஷபம், கேடயம், வெட்டுங்குதிரை, காமதேனு, தந்தப் பூப்பல்லக்கு ஆகிய வாகனங்களில் சுவாமி -அம்பாள் வீதி உலா நடைபெறும். ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.