செய்திகள் :

பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: மோடியை விமர்சித்த வைகோ!

post image

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக்னிக் மினிஸ்டர்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் திங்கள்கிழமை கலந்துகொண்ட வைகோ, மணிப்பூர் விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

மாநிலங்களவையில் மணிப்பூர் குறித்து வைகோ பேசியதாவது:

“மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை, கொலை என அனைத்து அரங்கேறி வருகின்றன. இதுகுறித்த முக்கிய விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.

ஒரு மில்லியன் டாலர் கேள்வியை கேட்க விரும்புகிறேன். 140 கோடி மக்களின் பாதுகாவலரான பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எப்போது கேட்டாலும் ஏதோவொரு நாட்டில் இருப்பதாக கூறுகிறார்கள். அவர் ஏன் இன்னும் மணிப்பூருக்கு செல்லவில்லை?

பிரதமராக அவரது கடமையில் இருந்து தவறி இருக்கிறார். மணிப்பூர் இந்தியாவில் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

வைகோவின் பேச்சை குறிக்கிட்டுப் பேசிய மாநிலங்களவை துணைத் தலைவர், அரசியலமைப்பு பதவியில் இருக்கும் மோடி குறித்த விமர்சிப்பது அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று தெரிவித்தார்.

ஆளுங்கட்சி எம்பிக்களின் அமளிக்கும் மத்தியில் உரையாற்றிய வைகோ, நான் என்ன தவறான வார்த்தையை பயன்படுத்தினேன் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, ’பிஎம் என்றால் பிரைம் மினிஸ்டர்’, ஆனால் நமது பிரதமரை பொறுத்தவரை ’பிக்னிக் மினிஸ்டர்’ என்று வைகோ தெரிவித்ததற்கு பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, பிரதமரை விமர்சிக்க நீங்கள் யார்? என்று பாஜகவினர் கோஷமிட்ட நிலையில், ‘நான் வைகோ, அண்ணாவின் பின்பற்றி வந்தவன்’ என பதிலளித்தார்.

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்துக்குத் தடை!

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.சென்னை மாநகரின் மையப் பகுதியில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வ... மேலும் பார்க்க

சென்னை ஏசி பேருந்துகளில் பயணிக்க ரூ. 2,000 பாஸ் அறிமுகம்!

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க மாதாந்திர சலுகை பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தற்போது குளிர்சாதனப் பேருந்தை தவிர்த்து மாதாந்திர பயண அட்டை மூலம் ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி திடீர் தில்லி பயணம்! காரணம் என்ன?

தமிழக அன்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி திடீர் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ளார்.தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, மத்திய வெளிய... மேலும் பார்க்க

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க