யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் இந்தியா வருகை!
பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஃபிரான்கோயிஸ் நோயல் பஃபெட் நாளை (ஏப்.23) அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளதாக இந்தியாவிலுள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கு வரும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் இந்தியாவின் உள்துறைப் பாதுகாப்பு குறித்து நடத்தப்படும் சர்வதேச கண்காட்சியான மிலிபோல்-ன் (MILIPOL) இரண்டாவது பதிப்பை இந்திய உள்துறை இணையமைச்சர் நித்யாந்த் ராய் உடன் இணைந்து துவக்கி வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தில்லியிலுள்ள தேசிய காவல் துறை நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளார்.
பின்னர், மிலிபோல் நிகழ்ச்சியில் பயங்கரவாதம், இணையவழிக் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், ஆள்கடத்தல் ஆகியவற்றைத் தடுக்க இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
இந்தப் பயணத்தில், தேசிய பாதுகாப்பு காவலர் தலைமைச் செயலகத்திற்கு செல்லும் அவர், அங்கு வீரர்களால் நடத்தப்படும் சிறப்பு ஒத்திகையைக் காணவுள்ளதாகவும் தேசிய வெடிகுண்டு தகவல் மையத்தை சுற்றிப்பார்க்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:ஜப்பானில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்!