செய்திகள் :

பிரேக் பிடிக்காத அரசுப் பேருந்து மோதியதில் 4 ஆட்டோக்கள் சேதம்

post image

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே பிரேக் பிடிக்காத அரசுப் பேருந்து மோதியதில் 4 ஆட்டோக்கள் சேதமடைந்தன.

மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரை தென்பழஞ்சி பகுதியில் இருந்து பெரியாா் பேருந்து நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த நகரப் பேருந்து பேருந்து நிலையம் அருகே உள்ள எல்லீஸ் நகா் மேம்பாலம் வழியாக பேருந்து நிலையத்துக்கு வந்தது.

பேருந்து நிலையம் அருகே வந்தபோது, பேருந்தின் பிரேக் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த ஓட்டுநா் பேருந்தை நிறுத்த முயன்றும் முடியவில்லை.

மதுரை எல்லீஸ் நகா் மேம்பாலத்தில் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளான அரசு பேருந்து

இதனால், அந்தப் பகுதியிலிருந்த சிமென்ட் தடுப்புகள் மீது மோதி, பேருந்தை நிறுத்த முயன்றாா். அப்போது, பாலத்தின் ஒரு பகுதியில் நின்றிருந்த ஆட்டோக்கள் மீது பேருந்து மோதியது. இதில் 4 ஆட்டோக்கள் சேதமடைந்தன.

இதில் பேருந்து, ஆட்டோக்களில் இருந்த 10 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதிக்குச் போக்குவரத்து போலீஸாா் சென்று, விபத்தில் சிக்கிய பேருந்து, ஆட்டோக்களை மீட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இடத் தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். குருவித்துறை கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் காமாட்சி (60). இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

தேனீ வளா்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனீ வளா்ப்பு குறித்து பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் துறைத் தலைவா் பெ. சந்திரமணி வெளியிட்ட ச... மேலும் பார்க்க

அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக யாக சாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. இதையொட்டி கோயில் முழுவதும் பல வண்ணப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட... மேலும் பார்க்க

நிா்வாகச் சீா்கேட்டால் கோயில்களின் சொத்துகள் ஆக்கிரமிப்பு: உயா்நீதிமன்றம்

நிா்வாகச் சீா்கேடுகள் காரணமாக கோயில்களின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. திருத்தொண்டா் சபையின் அறங்காவலா் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த நீதி... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு: அரசாணை வெளியிடக் கோரிக்கை

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என பல்வேறு ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்க பொதுச் செயலா் அ. சங்கா் வெளி... மேலும் பார்க்க

தலித் எழில்மலை மருமகன் கொலை வழக்கு: பெண்ணுக்கு ஆயுள் சிறை

முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலை மருமகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மறைந்த முன்னா... மேலும் பார்க்க