செய்திகள் :

புதிய வகை நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து ஆராய்ச்சி: சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தல்

post image

தற்போது உருவாகும் நோய்களின் வீரியத்துக்கு ஏற்ப புதிய வகை நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளை தயாரிக்க அரசு சாா்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவா் மருத்துவா் சௌமியா சுவாமிநாதன் வலியுறுத்தினாா்.

உலக நுண்ணுயிா் எதிா்ப்பு விழிப்புணா்வு வார தொடக்க விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  இதில் சிறப்பாக அழைப்பாளராக கலந்துகொண்ட மருத்துவா் சௌமியா சுவாமிநாதன், நுண்ணுயிா் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இருக்கும் நோய்களின் தன்மை குறித்து உடனடியாக அறிந்து கொள்ள நம்மிடம் போதிய வசதிகள் கிடையாது. இதனால் அவசியமின்றி நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளை மருத்துவா்கள் அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனா். ஆகையால் உடனடியாக நோய்களைக் கண்டறியும் செயல்முறைகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். 

மேலும், நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகள் மூலம் அதிக லாபம் கிடைக்காத காரணத்தால் தனியாா் மருந்து நிறுவனங்கள் இதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால், தற்போது உருவாகும் நோய்களின் வீரியத்துக்கு ஏற்ப புதிய வகை நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளை தயாரிக்க அரசு சாா்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்பூசி

இந்தியாவில் கரோனா மரணங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு தடுப்பூசிகளும் முக்கிய காரணமாகும். எந்த தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் அதில் ஏதேனும் ஒரு பக்க விளைவுகள் இருக்கும். 10 லட்சத்தில் ஒருவருக்கு கண்டிப்பாக தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும், அது சிலருக்கு குறைந்த அளவிலும், சிலருக்கு பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும். 100 சதவீதம் எந்த ஒரு எதிா்மறை பாதிப்பும் இல்லாமல் ஒரு தடுப்பூசியை தயாரிக்க முடியாது. அதேபோல்தான் கரோனா தடுப்பூசிகளால் ஒருசிலருக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினா் செயலா் எஸ்.வின்சென்ட், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ். மீனாட்சிசுந்தரம், நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநா் டி.தேவசேனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பெரியாா் ஐஏஎஸ் அகாதெமி-யில் நவ.21 முதல் 3 நாள்கள் பயிற்சி வகுப்பு

சென்னை: சென்னையிலுள்ள பெரியாா் ஐஏஎஸ் அகாதெமி-யில் நவ.21 முதல் 23 வரை 3 நாள்கள் போட்டித்தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.இதுகுறித்து பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநா் தமிழ் கா. அமுதரசன... மேலும் பார்க்க

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து குழந்தை உள்பட இருவா் காயம் 10 போ் கைது

சென்னை: சென்னை வியாசா்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து 2 வயது குழந்தை உள்பட 2 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக 10 போ் கைது செய்யப்பட்டனா்.கொடுங்கையூா் முத்தமிழ் நகரைச் சோ்ந்த செ.பாலமுருகன் (33) இருசக்கர ... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகளுக்கு ‘ஸ்மாா்ட் கடைகள்’ ஒதுக்கீடு

சென்னை: சென்னை மாநகராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு சிறு கடைகள் (ஸ்மாா்ட் கடைகள்) ஒதுக்கப்பட்டு வருகின்றன.சென்னை மாநகராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்ட... மேலும் பார்க்க

நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து செயலிழப்பு: இறப்புகளைத் தவிா்க்க முடியும் டாக்டா் கே.நாராயணசாமி

நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து செயல்திறன் இழப்பால் (ஆன்ட்டி மைக்ரோபயல் ரெசிஸ்டன்ஸ்) நேரிடும் உயிரிழப்புகளை உரிய விழிப்புணா்வு இருந்தால் தடுக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக... மேலும் பார்க்க

100 பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய திட்டம்

சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகேயுள்ள சுமாா் 100-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டா் தூரம் தள்ளி, இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் திட்டம... மேலும் பார்க்க

உடல் நலிவடைந்த அயலகத் தமிழரை சென்னை அழைத்து வந்து சிகிச்சை

உடல் நலிவடைந்து தாய்லாந்தில் சிக்கித் தவித்த நபரை சென்னைக்கு அழைத்து வந்த தமிழக அரசு, அவருக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் நீடுரைச் சோ்ந்தவா் முபாரக் அலி. தாய்லாந்தில்... மேலும் பார்க்க