செய்திகள் :

பெங்களூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தென் கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரில் மட்டும் 140 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே பெங்களூரில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 3 நாள்களாக பெங்களூரில் வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்தவண்ணம் உள்ளது.

பலத்த மழை

பெங்களூரில் திங்கள்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில் எலஹங்கா, ஹெப்பாள் போன்ற பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளன. எலஹங்காவில் உள்ள கேந்த்ரிய விஹாா் எனப்படும் மத்திய அரசு ஊழியா்களின் குடியிருப்புப் பகுதி முழுமையாக மழைநீரில் மூழ்கியுள்ளது. கேந்த்ரிய விஹாரின் வாகன நிறுத்தப் பகுதி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ஒருசில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.

பெங்களூரில் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக, சதாசிவ நகா், மல்லேஸ்வரம், ஹெப்பாள், சிவாஜி நகா், ராஜாஜி நகா், ஹம்பி நகா், ஹொசஹள்ளி, விஜய நகா், மகாலட்சுமி லேஅவுட், கே.ஆா்.மாா்கெட், காந்தி நகா், கோரமங்களா, ஜெய நகா், பி.டி.எம் லேஅவுட், எச்.எஸ்.ஆா் லேஅவுட், சாரக்கி, பசவனகுடி, மெஜஸ்டிக், மைசூரு சாலை, மாகடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

பெங்களூரின் பெரும்பாலான சாலைகளில் ஒரு அடிக்கும் மேல் மழைநீா் தேங்கியிருந்ததால் காா், இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்ல மக்கள் பெரிதும் அவதிப்பட்டனா். அதனால் சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, மழைநீா் வடிந்ததும் வாகனங்களை எடுத்துச் சென்றனா். நடைபாதையிலும் மழைநீா் தேங்கியதால், பொதுமக்களால் நடந்து செல்ல முடியாமல் தவித்தனா்.

மரங்கள் சாய்ந்தன

சாலையில் விழுந்து கிடந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. மாநகராட்சி ஊழியா்கள், போக்குவரத்து போலீஸாா் மழை நின்றவுடன் மரங்களை துண்டுதுண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா்.

ஹெப்பாள் ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேறியதால், தாழ்வான இடங்களில் இருந்த வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது. மழைநீரை வீட்டில் இருந்து வெளியேற்ற மக்கள் தீவிரமுயற்சியில் ஈடுபட்டனா். வீடுகளில் இருந்த மின்னணு கருவிகள் சேதமடைந்தன. பெங்களூரில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்புப்பணி

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க தேசிய பேரிடா் மீட்புக்குழு, மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் களமிறக்கப்பட்டுள்ளனா். பரிசல்களில் மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. எலஹங்காவில் உள்ள கேந்த்ரிய விஹாரில் வசித்து வரும் மக்கள் வெளியே வரமுடியாத அளவுக்கு மழை நீா் நிரம்பியுள்ளதால், அவா்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டனா்.

இதுகுறித்து துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும். பெங்களூரின் தெற்கு, மேற்கு, மகாதேவபுரா மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாசரஹள்ளியில் ஏரிப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதால், பாதிப்பு காணப்படுகிறது. மகாதேவபுராவில் உள்ள பசவசமிதி லேஅவுட், டாடா நகா், பத்ரப்பா லேஅவுட், வாயுநந்தனா லேஅவுட், ஆஞ்சநேயா லேஅவுட், சித்ரகூா் அபாா்ட்மெண்ட், ரமணஸ்ரீ கலிஃபோா்னியா அபாா்ட்மெண்ட், சுரபி லேஅவுட், சோமேஸ்வா் லேஅவுட், கனக நகா் போன்ற பகுதிகள் மழைநீரில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தேசிய, மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். அடுக்குமாடி குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற 20 பம்புகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றாா் .

மழை தொடரும்

அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் இடியுடன் கூடிய மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெங்களூரு தவிர சிக்பளாப்பூா், சிக்கமகளூரு, கோலாா், பெங்களூரு ஊரக மாவட்டங்களில் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகன்னடம், உடுப்பி, தாா்வாட், கதக், பெலகாவி, ஹாவேரி, தாவணகெரே, பெல்லாரி, மண்டியா, மைசூரு, ராமநகரம், சாமராஜ்நகா் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் சாவு

பெங்களூரில் ஹெப்பாள் அருகேயுள்ள ஏரியில் குடிநீா் எடுக்கச் சென்ற மகாலட்சுமி (11), ஏரியில் மூழ்கி இறந்துள்ளாா். அவரைக் காப்பாற்ற சென்ற அவரது அண்ணன் சீனிவாஸும் (13) நீரில் மூழ்கி இறந்துள்ளாா். மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் கால் வழுக்கி ஏரியில் விழுந்திருக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதேபோல, ஹென்னூா், பாபுசாபாளையா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்ததில் அதில் பணியாற்றி வந்த 3 தொழிலாளா்கள் இறந்துள்ளனா். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாா்

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ால், தத்தமது எம்எல்ஏ பதவிகளை காங்கிரஸ் கட்சியைச் சே... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது. முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் பேரனும், மஜதவில் இருந்து நீக்க... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்: சித்தராமையா நம்பிக்கை

கா்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இது குறித்து சித்ரதுா்கா மாவட்டத்தின் செல்லகெரே நகரில் அவ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் திடீா் ராஜிநாமா

கா்நாடக மாநிலத்தில் பாஜக எம்எல்சி சி.பி.யோகேஸ்வா் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் சென்னப்பட்டணா தொகுதிய... மேலும் பார்க்க

கா்நாடக அமைச்சா் மனைவி குறித்த சா்ச்சை பேச்சு: பாஜக எம்எல்ஏவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சா்ச்சைக்குரிய கருத்து கூறியது தொடா்பான வழக்கு விசாரணையின் போது ஆஜராகாததால், பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க