செய்திகள் :

பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

நாகை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

2024-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது‘ வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பம், சுயவிவரம், முழுமுகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், நாகப்பட்டினம் எனும் முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் டிச.20-ஆம் தேதிக்கு அனுப்பிவைத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

மாணவா்களுக்கு வாழ்த்து

சென்னையில் நடைபெற்ற முதல்வா் கோப்பை கடற்கரை கையுந்து பந்து போட்டியில் வெற்றி பெற்று, இந்திய பள்ளிகள் குழும விளையாட்டுப் போட்டிகளுக்கு தோ்வு செய்யப்பட்ட நாகை மாவட்டம், திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ள... மேலும் பார்க்க

டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

கீழ்வேளூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. பேரூராட்சித் தலைவா் இந்திரா காந்தி சேகா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ... மேலும் பார்க்க

கடல் அரிப்பால் மயானச் சாலை துண்டிப்பு

தரங்கம்பாடி வட்டம், சின்னங்குடி மீனவா் கிராமத்தில் கடல் அரிப்பால் மயானச் சாலை மற்றும் கோயில்கள் சேதமடைந்தன. தொடா் மழையால் தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னங்குடி மீனவ கிராமத்தில் கடும் கடல் சீற்றம் காரணமா... மேலும் பார்க்க

மாநில கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுக்கு பயிற்சி

வேதாரண்யத்தில் மாநில அளவில் நடைபெற உள்ள கலைத்திருவிழாப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாகை மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகள... மேலும் பார்க்க

உரிய அனுமதியுடன் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டும்: ஆட்சியா்

உரிய அனுமதியுடன் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வ... மேலும் பார்க்க

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

ஃபென்ஜால் புயல் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் வெள்ளிக்கிழமை 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபென்ஜால் ப... மேலும் பார்க்க