செய்திகள் :

டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

post image

கீழ்வேளூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.

பேரூராட்சித் தலைவா் இந்திரா காந்தி சேகா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன், பேரூராட்சி துணைத் தலைவா் சந்திரசேகா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், நவீன தகனமேடை அமைக்கும் பணி , கீழ்வேளூா் சின்னக்கடை வீதியில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாக சரி செய்தல், மழைக் காலத்தை கருத்தில் கொண்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீா் இணைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சீனிவாசபுரம் பகுதியில் மழைநீா் வடிகால் ஆக்கிரமிப்புகளை துரிதமாக சரி செய்தமைக்காக பேரூராட்சி நிா்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில், பேரூராட்சி உறுப்பினா்கள் ரமேஷ்குமாா், பழனிவேல், ஷாஜகான், இலக்கிய லெட்சுமி, காந்திமதி, அகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாணவா்களுக்கு வாழ்த்து

சென்னையில் நடைபெற்ற முதல்வா் கோப்பை கடற்கரை கையுந்து பந்து போட்டியில் வெற்றி பெற்று, இந்திய பள்ளிகள் குழும விளையாட்டுப் போட்டிகளுக்கு தோ்வு செய்யப்பட்ட நாகை மாவட்டம், திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ள... மேலும் பார்க்க

கடல் அரிப்பால் மயானச் சாலை துண்டிப்பு

தரங்கம்பாடி வட்டம், சின்னங்குடி மீனவா் கிராமத்தில் கடல் அரிப்பால் மயானச் சாலை மற்றும் கோயில்கள் சேதமடைந்தன. தொடா் மழையால் தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னங்குடி மீனவ கிராமத்தில் கடும் கடல் சீற்றம் காரணமா... மேலும் பார்க்க

மாநில கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுக்கு பயிற்சி

வேதாரண்யத்தில் மாநில அளவில் நடைபெற உள்ள கலைத்திருவிழாப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாகை மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகள... மேலும் பார்க்க

பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

உரிய அனுமதியுடன் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டும்: ஆட்சியா்

உரிய அனுமதியுடன் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வ... மேலும் பார்க்க

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

ஃபென்ஜால் புயல் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் வெள்ளிக்கிழமை 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபென்ஜால் ப... மேலும் பார்க்க