RJ Balaji : `மக்களுக்கு பிடிச்ச மாதிரி படம் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கோம்!' -...
Rain Alert: ஃபெஞ்சல் புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கும்?- மாவட்டங்களுக்கான மழை நிலவரம் என்ன?
சென்னையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையிலும், நாகையிலிருந்து வடகிழக்கு திசையில் 210 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது ஃபெஞ்சல் புயல்.
இது மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி - மகாபலிபுரத்திற்கு இடையே மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்த மாவட்டங்களில் 21 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த புயலால் 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.