Rain Alert : சென்னையில் மோசமான வானிலை; வானில் வட்டமடிக்கும் விமானம் - எந்தெந்த விமானங்கள் இயங்கும்?!
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக மாறி புதுச்சேரி மற்றும் மாமல்லபுரம் இடையில் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடையே நாளை கடக்கும் என்று நேற்று காலை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையொட்டி, நேற்று இரவு முதலே, சென்னை, திருவள்ளூர், மாமல்லபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சிங்கப்பூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இன்று காலையில் குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் ஒன்று மோசமான வானிலை மற்றும் கன மழையால் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்து வருகின்றது.
மேலும், இன்று சென்னையில் இருந்து திருச்சி, மைசூரு, பெங்களூரு, அந்தமான் செல்லும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் இருந்து விமானப் பயணம் மட்டுமல்லாமல் வேறு எந்த பயணம் மேற்கொள்ளவிருந்தாலும் அது இன்று இயக்கப்படுமா என்பதை செக் செய்து கொள்ளுங்கள். 'நிச்சயம் இன்றே செல்ல வேண்டும்' என்றால் மட்டுமே இன்று பயணம் மேற்கொள்வது நல்லது.