செய்திகள் :

தமிழ்நாட்டிலிருந்து 67 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ஆழ்வார் சிலை; திருப்பிக் கொடுக்கும் லண்டன்!

post image
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பழைமையான சவுந்திரராஜ பெருமாள் கோயில் உள்ளது.

இந்த கோயிலில் 1957 முதல் 1967ம் ஆண்டுகளுக்குள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகள் என 4 சிலைகள் திருடப்பட்டது. திருடப்பட்ட இந்த சிலைகள் கடத்தல் கும்பலால் வெளிநாட்டுக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக, தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீஸார் 2020ல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகள், வெளிநாட்டைச் சேர்ந்த கடத்தல் கும்பலால், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சிலைகள், வெளிநாட்டில் பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

திருமங்கை ஆழ்வார்

குறிப்பாக, திருமங்கை ஆழ்வார் சிலை, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையின் அஸ்மோலியன் அருங்காட்சியகத்தால், 1967ல் வாங்கப்பட்டு உள்ளதும் தெரியவந்தது. மற்ற சிலைகள், அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருக்கின்றன. இந்த சிலைகள் திருடப்பட்டதுடன், அவற்றுக்கு பதிலாக, கும்பகோணம் கோவிலில் போலி சிலைகள் வைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. வெளிநாட்டில் உள்ள உண்மையான சிலைகளை மீட்கும் முயற்சியில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, அறிவியல்பூர்வமான ஆதாரங்களை தொகுத்து, நான்கு சிலைகளும் சவுந்தரராஜன் பெருமாள் கோவிலுக்கு சொந்தமானவை என, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை பிரதிநிதி ஒருவர், தமிழகம் வந்து சிலை தொடர்பான உண்மைத்தன்மையை ஆராய்ந்தார். அப்போது, புலன் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி சந்திரசேகரன் சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்று, அச்சிலை தமிழகத்தை சேர்ந்ததுதான் என ஆக்ஸ்போர்டு பல்கலை பிரதிநிதி ஒப்புக் கொண்டார்.

திருமங்கை ஆழ்வார்

இதையடுத்து, திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை., ஒப்புக்கொண்டது. விரைவில் அச்சிலை தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு, சம்பந்தப்பட்ட கும்பகோணம் சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பழையபடி வைக்கப்பட உள்ளது. காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகளை, மீட்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Mahua Moitra: `ஒவ்வொரு சங்கி நீதிபதியும்...' - DY சந்திரசூட்டுக்கு மஹுவா மொய்த்ரா காட்டமான பதில்!

முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் நீதித்துறை குறித்து தெரிவித்த கருத்துக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா. மாநில சட்டமன்றங்கள் மற்று... மேலும் பார்க்க

அதானி விவகாரம்: `எங்களுக்கு எவ்வித கோரிக்கையும் வரவில்லை' - வெளியுறவுத்துறை கூறுவதென்ன?

அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டுகள் வைத்துள்ள நிலையில், அது குறித்து அமெரிக்கா தங்களுடன் எவ்வித தொடர்பும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை.டெல்லியில் செய்த... மேலும் பார்க்க

``மக்களுக்கு பக்கோடா... சிலருக்கு அல்வா" - சர்வதேச ஆய்வறிக்கை குறித்து ஜெய்ராம் ரமேஷ் காட்டம்!

இந்தியாவில் ஊதிய ஏற்றத்தாழ்வு நிகழ்வதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு வகையில் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலைய... மேலும் பார்க்க

சேலம்: அமைச்சர் தொடங்கி வைத்த புத்தகத் திருவிழாவை புறக்கணித்ததா காவல்துறை? - சர்ச்சையும் விளக்கமும்!

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நூல்களைப் படிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தமிழக முதல்வரின் ஆலோசனைக்கிணங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், சேலத்... மேலும் பார்க்க