செய்திகள் :

அரபிக் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ போதைப்பொருள்; விரட்டி பிடித்த இந்திய கடற்படை!

post image

சமீப காலமாக இந்திய கடல் பகுதியின் வழியாக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் நடந்து வருகிறது. அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் உள்ள பாரன் தீவு அருகே, கடந்த 24-ல், சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித்திரிந்த மீன்பிடி படகில், கடலோர காவல் படையினர் மற்றும் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் போது 5,500 கிலோ எடையுள்ள, போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் இருந்த அண்டை நாடான மியான்மரைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சேட்டிலைட் போன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

போதைப்பொருளுடன் பிடிபட்ட கடத்தல்காரர்கள்
போதைப்பொருள் கடத்திய இலங்கை படகு

இந்நிலையில் நேற்று இந்திய அரபிக் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கன்னியாகுமரி பகுதியில் உள்ள அரபிக் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதியில் விரைந்து சென்ற இலங்கை படகினை இந்திய கடற்படையினர் விரட்டி பிடித்தனர்.

அந்த படகினை சோதனை செய்த போது அதில் சுமார் 500 கிலோ மெத்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அதனை பறிமுதல் செய்த இந்திய கடற்படையினர், போதைப்பொருள் மற்றும் இலங்கை படகில் இருந்த 7 இலங்கையர்கள் மற்றும் 2 இந்தியர்களையும் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களை தங்களது முகாமிற்கு கொண்டுசென்ற இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே போதைப்பொருள் எங்கிருந்து யார் மூலம் இந்திய கடல் பகுதியில் கடத்தி வரப்பட்டது என்பது குறித்து மத்திய மாநில புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடு முழுக்க ரத்தம்; மூவர் கொலை; ஓரே இரவில் சிதைக்கப்பட்ட குடும்பம் - திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டுள்ளது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்லடம் அருகே சேமலை... மேலும் பார்க்க

`நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் நான்' - பண மோசடிசெய்த இளைஞர் சிக்கியது எப்படி?

சென்னை எழும்பூர், பெருமாள்ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் வீர ராகவன் (28). இவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிற... மேலும் பார்க்க

சென்னை: மனைவியின் ஆசையை நிறைவேற்ற செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்

சென்னை தாம்பரம், கிருஷ்ணா நகர் முல்லை தெருவில் குடியிருந்து வருபவர் மோகன் குமார் (39). கார் டிரைவராக உள்ளார். இவரின் மனைவி பிரியங்கா (36). கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசை ஆசையாக பிரியங்காவுக்கு 4 சவ... மேலும் பார்க்க

நள்ளிரவில் தாய், தந்தை, மகன் அடித்துக் கொலை; திருப்பூரை அதிரவைத்த கொடூரம்! - போலீஸ் விசாரணை

திருப்பூர் மாவட்டம், சேமலைக்கவுண்டன்புதூர் வலுப்பூர் அம்மன் கோயில் அருகே தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமேலு ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். மென்பொருள் பொறியாளரான இவர்களது மகன் ... மேலும் பார்க்க

விஏஓ வீட்டில் 53 சவரன் தங்கநகைக் கொள்ளை; பைக்கை வைத்து திருடர்களை போலீஸார் மடக்கி பிடித்தது எப்படி?

நெல்லை மாவட்டம் பேட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் அந்தோணி தங்கராஜ். இவர், பழைய பேட்டையில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செங்கோல் மேரி, நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

அப்பார்ட்மென்ட்டில் உயிரை மாய்த்துக்கொண்ட பெண் பைலட்; காதலன் கைது - குடும்பத்தினர் எழுப்பும் கேள்வி!

மும்பையைச் சேர்ந்த 25 வயது பைலட் ஸ்ரிஷ்டி டுலி, அவரது அப்பார்ட்மெண்டில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டுலியின் குடும்பத்தினர் வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது காதலர் ... மேலும் பார்க்க