வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 13 வீரா்களுக்கு ரூ. 5.99 லட்சம் நிதி: துணைமுதல...
“பெருமை கொள்கிறேன்...” இளம் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை அந்த அணியின் சொந்த மண்ணில் வென்றது மிகவும் சிறப்பானது என தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இதையும் படிக்க: இந்தியாவின் மிகப் பெரிய கவலை கௌதம் கம்பீர்தான்: முன்னாள் ஆஸி. கேப்டன்
பெருமை கொள்கிறேன்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை அதன் சொந்த மண்ணில் கைப்பற்றியுள்ள இளம் இந்திய அணியை நினைத்து பெருமைப்படுவதாக இந்த தொடருக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: இந்த தொடர் முழுவதும் இந்திய அணி விளையாடிய விதத்தை நினைத்து உண்மையில் மிகவும் பெருமையாக உள்ளது. 3-1 என தொடரை கைப்பற்றியது சிறப்பான முயற்சிக்கு கிடைத்த வெற்றி. சூர்யகுமார் யாதவ் அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக செயல்பட்டார். அணியில் உள்ள அனைவரும் ஒவ்வொருவரின் வெற்றியையும் கொண்டாடுகிறார்கள். உங்கள் அனைவரையும் நினைத்து பெருமை கொள்கிறேன். இந்த மறக்க முடியாத வெற்றியை வசமாக்கிய இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.