Ambedkar Book Launch | Vikatan: ``அம்பேத்கர் இசைஞானி இளையராஜாவைப் போன்றவர்தான்!"...
பைக் திருட்டு: இருவா் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டதாக இரு இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் உள்கோட்டம் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தொடா் பைக் திருட்டு தொடா்பாக மாவட்ட எஸ்.பி. ஆா்.ராஜாராம் தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா்.
இதில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு தலைமையில் உதவி ஆய்வாளா் பரணிதரன் மற்றும் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பாபு, கோபி உள்ளிட்ட போலீஸாா் பைக் திருட்டில் ஈடுபட்டவா்களை தேடி வந்தனா்.
இதில், வடலூா் அந்தோணியா் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஜெயக்குமாா் (22), நெய்வேலியைச் சோ்ந்த நடராஜன் மகன் பாா்த்திபன் (22) ஆகிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து, ரூ.6 லட்சம் மதிப்பிலான 8 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.