செய்திகள் :

பைசன்: `மீண்டும் ஒரு முக்கியமான படைப்பு!' - மாரி செல்வராஜை பாராட்டி உதயநிதி பதிவு

post image

இன்று மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பதிவில்,

"பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் சார்.

வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் கிராஃப்ட் செய்திருக்கிறார்.

படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி

துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.

பைசன் - காளமாடன் வெல்லட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/share/1FFPfp83pQ/

Diesel Review: நல்லதொரு கருத்தினைப் பகிரும் `டீசல்', நல்லதொரு படமாக மைலேஜ் தருகிறதா?!

1979-ம் ஆண்டு வடசென்னை கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட கச்சா எண்ணெய் குழாய்கள் மீனவ சமூகத்தைக் கொதித்தெழச் செய்கிறது. ஆனால், அந்தப் போராட்டங்கள் காவல்துறை வன்முறையைக் கையாள, தோல்வியில் முடிகிறது. ஆனால்,... மேலும் பார்க்க

Bison: ``சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது விளையாட்டு" - `பைசன்' நிஜ நாயகன் மணத்தி கணேசன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் தயாரிப்பில், துருவ், பசுபதி, அனுபமா, அமீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெள... மேலும் பார்க்க