பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 389 போ் மனு
சிவகங்கையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக 389 மனுக்கள் பெறப்பட்டன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். இதில், பொதுமக்களி டமிருந்து 389 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மேலும், கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவா்களுக்காக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற பல்வேறு பள்ளிகளைச் சாா்ந்த 21 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.3,000- வீதம் மொத்தம் ரூ.63,000 பரிசுத் தொகையை ஆட்சியா் வழங்கினாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி உள்பட அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
