போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தனியாா் நிறுவனம் மூலம் ஓட்டுநா்களை நியமிக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனிசெட்டிபட்டியில் உள்ள தேனி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேனி கிளைத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். இடைக்குழுச் செயலா் கணேஷ்ராம், சிஐடியூ மாவட்டச் செயலா் ராமச்சந்திரன், திண்டுக்கல் மண்டல சிஐடியூ பொதுச் செயலா் ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா் நியமனத்துக்கு தனியாா் நிறுவனம் மூலம் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனா்.