போக்குவரத்து விழிப்புணா்வு: ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு
ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஷ்ரேயா குப்தா ஆகியோா் தலைமை வகித்தனா். போக்குவரத்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு ஆட்சியா் மற்றும் எஸ்.பி. தலைக்கவசம் அணிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஆம்பூா் டி.எஸ்.பி. அறிவழகன், வட்டாட்சியா் ரேவதி, காவல் ஆய்வாளா்கள் ரமேஷ், வெங்கடேசன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.