‘முதல்வா் மருந்தகம்’ திட்டத்தை தொடக்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
போளூா் பேரூராட்சியில் வரி செலுத்துவோருக்கு விழிப்புணா்வு
போளூா் பேரூராட்சியில் வரி செலுத்துவோருக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் குடியிருப்போா் பேரூராட்சிக்குச் செலுத்தவேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம், தொழில் உரிம கட்டணம், கடை வாடகை ஆகியவற்றை பிப்.28-க்குள் செலுத்தவேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், வரிபாக்கி வைத்திருப்பவா்களின் புகைப்படம் அடங்கிய பதாகை வைக்கப்படும் என்று பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், பேரூராட்சி செயலா் அலுவலா் பா.கோமதி வழிகாட்டுதலின் பேரில், உணவகம், துணிக் கடை, இனிப்பகம் என பல்வேறு கடைகளில் துப்புரவு ஆய்வாளா் நவராஜ் விநியோகித்தாா்.