மகாராஷ்டிர தேர்தல்: பணம் கொடுத்து சிக்கிய பாஜக தலைவர் வினோத் தாவ்டே?
மக்கள் ஆட்சிக்கு இந்திரா காந்தி உத்வேகம்: தெலங்கானா முதல்வர்
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறியது,
இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தியின் சேவைகளை முதல்வர் நினைவு கூர்ந்தார். மேலும் அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படும் ‘தேசிய ஒருங்கிணைப்பு தினத்தை’ முன்னிட்டு மக்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
நேருவின் வலுவான தலைமைப் பாரம்பரியத்தைத் தொடர்வதற்காகவும், நாட்டு மக்களுக்குப் பயனளிக்கும் புரட்சிகர சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியதற்காகவும் ‘இரும்புப் பெண்மணியை முதல்வர் பாராட்டினார்.
ஏழைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக இந்திரா காந்தி சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டார். "பெண்கள் இந்திய வலிமையின் சின்னம்" என்ற இந்திரா காந்தியின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, தெலங்கானா அரசும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அதிக முன்னுரிமை அளித்து வருகிறது என்று முதல்வர் கூறினார்.
இந்திரா காந்தியின் பிறந்தநாளில் 22 மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்திரா மகிளா சக்தி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்துவது பெருமைக்குரியது.
நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, 4,000 மகளிர் குழுக்களுடன் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது, மக்கள் அரசின் மற்றொரு பெரிய சாதனை என்று முதல்வர் கூறினார்.
தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகேஷ் குமார் கவுடும் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.