செய்திகள் :

மரணம் குறித்து முன்கூட்டியே உணர முடியுமா? - அறிவியல் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!

post image

மரணம் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று. இருப்பினும் சிலர் தங்களது இறுதி நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அது குறித்து சுற்றுத்தார்களிடம் கூறுவார்கள்.

தங்களின் கடைசி ஆசை அல்லது எதிர்காலத்தில் இவ்வாறு இருங்கள் என்று அறிவுரை கூறுவது என தங்களின் இறுதி நேரத்தை நெருங்கி விட்டதை உணர்ந்து வித்தியாசமான நடத்தையை வெளிப்படுத்துவார்கள். இது தற்செயலான நிகழ்வாக கருதப்பட்டாலும், இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி இதழில் வெளியான ஒரு ஆய்வில், எதிர்பாராதவிதமாக தனது மரணத்தை உணர்ந்த நோயாளி பற்றி விவரிக்கப்பட்டுள்ளது

இதனை ஆராய்ச்சியாளர்கள் "மரண முன்னறிவிப்பு" என்று குறிப்பிடுகின்றனர். உடலின் உயிரியல் நரம்பியல் சமிச்சைகள் (signals) தான் இந்த ஆழ்ந்த உணர்வுக்கு காரணம் என்றும் அறிவியலாளர்கள் கணிக்கின்றனர்.

death premonitions

மரண முன்னறிவிப்பு என்பது என்ன?

மரணம் முன்னறிவிப்பு என்பது தனி நபர்கள் தங்களின் இறுதி நாட்கள் நெருங்கி விட்டதாக ஏற்படும் கனவுகள் அல்லது அசாதாரண உணர்வுகள் ஆகும்..

இறுதி கட்டத்தில் இருக்கும் நோயாளிகளிடம் ஒருவிதமான அமைதியான ஏற்றுக்கொள்ளுதல், விவரிக்க முடியாத தெளிவு ஆகியவை காணப்படுமாம். மரணத்தை நெருங்கும் தருவாய்களில் மூளை மற்றும் உடலுக்கு இடையிலான தொடர்பு, மூளை செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் தான் இந்த முன்னறிவிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உடலின் செயல்பாடுகள் குறைய தொடங்கும் போது ஹார்மோன்கள் மற்றும் ஆக்சிஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல விஷயங்கள் இதுபோன்ற உள்ளுணர்வுகளை ஏற்பட செய்கின்றதாகவும் கூறுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் வாழ்க்கையின் இறுதி கட்டத்தை நெருங்கும் போது ஒருவரின் மூளை உணர்வுபூர்வமாகவே நிறைவில் தீவிரமான கவனத்தை செலுத்தக் கூடும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். ஒருவேளை இந்த தெளிவுதான் அந்த நோயாளியின் மரணத்தின் முன்னறிவிப்பதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Nobel Prize: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் 3 அமெரிக்கர்கள்; என்ன கண்டுபிடிப்பு தெரியுமா?

இயற்பியல் துறையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகிய மூன்று அறிவியலாளர்கள் வென்றுள்ளனர். மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் இயக்கவியல் குறித்த ஆய்வுக்... மேலும் பார்க்க

Planet Y: பூமிக்கும் புதனுக்கும் இடைப்பட்ட வெளியில் புது கிரகமா?- வானியலாளர்கள் வெளியிட்ட தகவல்!

சூரிய மண்டலத்தின் தொலைதூரப் பகுதியில் இதுவரை கண்டறியப்படாத ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் புதிய ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மர்மமான கிரகத்திற்கு 'பிளானட் Y' (Planet Y) என்ற... மேலும் பார்க்க

'இரும்பை உருக்கும் மந்திரக் கல்' - வைரலாகும் போலி வீடியோ - பின்னிருக்கும் அறிவியல் உண்மை என்ன?

ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் அரிய கருப்பு நிறக் கல் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கல் கையில் தொடும்போது சாதாரணமாக குளுமையாக இருந்தாலும் அதில் இரும்பு, எஃகு பொருட்களை... மேலும் பார்க்க

"5 லிட்டர் தண்ணீரில் 6 மாதம் அடுப்பு எரியுமா?" - Prof T.V.Venkateswaran Interview

தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு எரியும் அடுப்பை திருப்பூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு அடுப்பு எரிவதன் பின்னணியில் இருக... மேலும் பார்க்க

``உலகின் சிறந்த விஞ்ஞானிகள்'' - ஸ்டான்போர்ட் பல்கலை., பட்டியலில் ராமநாதபுரம் உதவிப் பேராசிரியர்!

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை மற்றும் எல்ஸ்வேர் நிறுவனம் இணைந்து உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளின் பட்டியலைத் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட இந்த தரவரிசைப் பட்டிய... மேலும் பார்க்க